கியாஸ் உருளைக்கு ரூ.100 மானியம் வழங்கப்பட்டு விட்டதா? மு.க. ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி

Stalin Faces Query on LPG Relief: “2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக திமுக மீண்டும் ஒரு பொய்மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறது. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த திமுக நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தொடர்பாக இன்னுமொரு பொய்யைக் கூறி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது கனவிலும் நடக்காது” என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: March 27, 2026 at 11:17 am

சென்னை, மார்ச் 26, 2026: பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (வியாழக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக திமுக மீண்டும் ஒரு பொய்மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறது. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த திமுக நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தொடர்பாக இன்னுமொரு பொய்யைக் கூறி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது கனவிலும் நடக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டது என்றால்….

  1. சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் வழங்கப்பட்டு விட்டதா?
  2. டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்பட்டு விட்டதா?
  3. மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்பட்டு விட்டதா?
  4. ஐந்தரை லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலையும், 50 லட்சம் இளைஞர்களுக்கு தனியார் வேலையும் வழங்கப்பட்டு விட்டதா?
  5. மாதந்தோறும் மின்பயன்பாடு கணக்கிடப்பட்டு, ஆண்டுக்கு ரூ.6000 அளவுக்கு மின்கட்டணம் குறைக்கப்பட்டு விட்டதா?
  6. பேருந்துக் கட்டணங்கள் குறைக்கப்பட்டு விட்டனவா?
    7.இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் நடைமுறைக்கு வந்து விட்டதா?
  7. அரசுத் துறைகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களும், பகுதிநேர ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்பட்டு விட்டார்களா?
  8. ஊரக வேலைத் திட்டத்தின் வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்பட்டு விட்டதா?
  9. மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டார்களா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்” எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: பொதுத்தொகுதிக்கு ரூ.25,000, தனித்தொகுதிக்கு ரூ.10,000.. ம.தி.மு.க. அறிவிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com