Thol Thirumavalavan | திருமாவளவனின் பழைய வீடியோ ஒன்று அவரது ட்விட்டரில் பதிவேற்றப்பட்டது பின்னர் நீக்கப்பட்டது பேசுபொருளாகியுள்ளது.
February 6, 2025
Thol Thirumavalavan | திருமாவளவனின் பழைய வீடியோ ஒன்று அவரது ட்விட்டரில் பதிவேற்றப்பட்டது பின்னர் நீக்கப்பட்டது பேசுபொருளாகியுள்ளது.
Published on: September 14, 2024 at 3:45 pm
Updated on: September 14, 2024 at 10:52 pm
Thol Thirumavalavan | வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் ட்விட்டர் எக்ஸ் கணக்கில் வீடியோ ஒன்று பதிவேற்றப்பட்டிருந்தது. அந்த வீடியோவில், “ஆட்சியிலும் அதிகாரத்தில் பங்கு” என திருமாவளவன் பேசியுள்ளார். அதாவது, “2016ல் கூட்டணி ஆட்சியின் குரலை உயர்த்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். அமைச்சரவையில் இடம் வேண்டும் என்பது பவர் ஷேர்; கூட்டணியில் இடம் வேண்டும் என்பது சீட் ஷேர் எனப் பேசி இருந்தார்.
இந்த வீடியோ அவரது ட்விட்டர் கணக்கில் பதிவேற்ற சில நிமிடங்களில் அதிலிருந்து நீக்கப்பட்டது. முன்னதாக வி.சி.க.வின் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதுவும் அரசியலாக பார்க்கப்பட்டது. ஏனெனில் திமுக கூட்டணியில்தான் வி.சி.க உள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து 17 நாள்களுக்கு பின்னர் திரும்பிய மு.க. ஸ்டாலிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.
இதற்குப் பதிலளித்த மு.க. ஸ்டாலின், “இது பொதுப் பிரச்னை. அரசியல் கூட்டணிகளுக்கு இதில் சம்பந்தம் இல்லை என திருமாவளவன் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். இதில் நான் விளக்கம் சொல்ல ஒன்றும் இல்லை” என்றார். இந்த நிலையில் திருமாவளவன் ட்விட்டர் எக்ஸ் கணக்கில் ஆட்சி அதிகாரம் பகிர்வு தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த தொல். திருமாவளவன், “வீடியோ வெளியிட்டது பற்றி எனக்கு தெரியாது. அட்மின் வெளியிட்டு இருக்கலாம்” என்றார்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வீடியோ, மீண்டும் மறுபதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோ மேலோ கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘விஜய் வந்தாலும் தி.மு.க. வெற்றிபெறும்’: ஆனால்.. திருமாவளவன் ட்விஸ்ட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com