ஹோட்டல் சுவையில் கார சட்னி.. தோசைக்கு சூப்பர் காம்பினேஷன்!

Food: இட்லி தோசைக்கு சுவையான கார சட்னி இப்படி செய்து பாருங்கள்.

Published on: March 24, 2026 at 9:00 am

Updated on: March 23, 2026 at 7:50 pm

சென்னை, மார்ச் 24, 2026: ஹோட்டல் ஸ்டைலில் சுவையான கார சட்னி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

பெரிய வெங்காயம் -3
பழுத்த தக்காளி -4
காஷ்மீரி மிளகாய் -8 ( காரத்துக்கு ஏற்ப )
புளி -நெல்லிக்காய் அளவு
பூண்டு -5 பல்லு
உப்பு – தேவையான அளவு

தாளிதம் தயாரிக்க

கடுகு -3/4 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு -1 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் -1
கறிவேப்பிலை -1 கொத்து
நல்லெண்ணெய் -1 ½ டேபிள்ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும். பின்னர் தக்காளி, காஷ்மீரி மிளகாய், புளி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இவற்றை நன்கு ஆறவிடவும். ஆறினதை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு அரைத்து வேறு பாத்திரத்தில் மாற்றவும்.

சட்னியை தாளிக்க ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். தாளித்ததை சட்னியில் சேர்த்து கலந்துக் கொள்ளவும். இப்போது ஹோட்டல் ஸ்டைலில் சுவையான கார சட்னி தயார். இது தோசை, இட்லி, இடியாப்பம், சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்கும்.

இதையும் படிங்க: நச்சுன்னு ஒரு நண்டு மசாலா.. இப்படி செஞ்சு அசத்துங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com