Assembly Election 2026: தி.மு.க கொடுக்கும் 5 தொகுதிகளை ஏற்பதா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவசர ஆலோசனை நடத்தினார்கள்.
Assembly Election 2026: தி.மு.க கொடுக்கும் 5 தொகுதிகளை ஏற்பதா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவசர ஆலோசனை நடத்தினார்கள்.

Published on: March 23, 2026 at 1:13 pm
Updated on: March 23, 2026 at 1:48 pm
சென்னை, மார்ச் 23, 2026: 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வழங்கும் 5 தொகுதிகளை ஏற்பதா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்கள்.
2026 சட்டமன்ற தேர்தல்
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே மாதம் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் தொடர் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதி
2021 சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, 2026 சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதிகள் மட்டுமே வழங்க தி.மு.க. முன்வந்துள்ளது.
இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் குழப்பம் நீடிக்கிறது. இதற்கிடையில் இன்று (திங்கள்கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதில், தி.மு.க. வழங்கும் 5 தொகுதிகளை ஏற்பதா வேண்டாமா என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தி.மு.க. 5 தொகுதிகள் மட்டுமே வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திமுக அரசு மீது மக்கள் அதிருப்தி.. பியூஷ் கோயல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com