Mani Ratnam’s next Film: இயக்குனர் மணிரத்தினத்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Mani Ratnam’s next Film: இயக்குனர் மணிரத்தினத்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Published on: March 20, 2026 at 2:51 pm
சென்னை மார்ச் 20,2026: இயக்குநர் மணிரத்தின் அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இது குறித்து அதி்காரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனம் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ வெளியிட்ட தகவலின்படி, இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் மூலம் இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இந்த படத்தில் இணைவார் என்ற வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த படம் காதல் பின்னணியிலான கதையாக உருவாகும் என கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு, மற்ற நடிகர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதி – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், சாய் பல்லவி முதன்முறையாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாய் பல்லவி தற்போது ‘ஏக் தின்’ திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி உள்ளார். அமிர் கான் தயாரித்துள்ள இந்த படத்தில், அவரது மகன் ஜுனைத் கான் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் 2026 மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி.. வெளியீடு தேதி அறிவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com