திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் கேட்கிறதா விசிக? பரபரப்பு தகவல்கள்!

Assembly Election 2026: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகள் வரை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published on: March 18, 2026 at 2:20 pm

சென்னை மார்ச் 18 2026; திமுக கூட்டணியில் தொல் திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 சீட்டுகள் வரை கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற பொது தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெறுகிறது; எந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன; அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வைகோவின் மதிமுக கட்சிக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நான்கு தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடுகிறது; மீதமுள்ள மூன்று தொகுதிகளிலும், திமுக சின்னத்திலேயே மதிமுக போட்டியிடுகிறது.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகள் வரை கேட்பதாக கூறப்படுகிறது; இதற்கு திமுக தரப்பில் ஆட்சேபம் எழுந்துள்ள நிலையில், ஆறு முதல் எட்டு தொகுதிகள் வரை, கொடுக்க முன்வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க; புதுச்சேரியில் தி.மு.க. வேட்புமனு தாக்கல்.. காங்கிரஸ் அதிர்ச்சி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com