Aadhav Apologises to Rajinikanth: நடிகர் ரஜினிகாந்தை குறித்து தெரிவித்த சர்ச்சையான கருத்துகளுக்கு ஆதவ் அர்ஜுனா வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
Aadhav Apologises to Rajinikanth: நடிகர் ரஜினிகாந்தை குறித்து தெரிவித்த சர்ச்சையான கருத்துகளுக்கு ஆதவ் அர்ஜுனா வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

Published on: March 18, 2026 at 10:57 am
Updated on: March 18, 2026 at 2:20 pm
சென்னை, மார்ச் 18 2026: தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா முன்னதாக, ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருந்ததற்கு திமுகவின் அழுத்தம் காரணமாக இருந்ததாக அவர் கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு ரஜினிகாந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அது உண்மைக்கு புறம்பானது. எனக்கு ஆதரவாக பேசிய அனைவருக்கும் நன்றி. காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் என்று குறிப்பிட்டிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கொளத்தூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா நடிகர் ரஜினிகாந்திடம் வெளிப்படையாக மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து தெரிவித்த அவர், தாம் கூறிய கருத்து நேரடி மிரட்டல் குறித்து அல்ல, வெளிப்புற அழுத்தங்கள் குறித்து தான் என்பதையும் அவர் விளக்கினார். தலைவர் ரஜினிகாந்த் உங்கள் மீது எனக்கு வெறுப்பு கிடையாது. என்றும் அன்பு மட்டும்தான் இருக்கிறது. ரஜினியை சிறுமைப்படுத்தவோ, அவர் பயந்துவிட்டார் என்றோ நான் சொல்லவில்லை. திமுக வின் சூழ்ச்சி என்றுதான் நான் கூறினேன்.
தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறேன் என்றும், ரஜினிகாந்தின் மனதை புண்படுத்தியிருந்தால் மனமாற மன்னிப்பு கோருகிறேன் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்.. ரஜிகாந்த்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com