தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம்? மேட்ரிக்ஸ் கருத்துக் கணிப்பு முடிவுகள்.. முழு விவரம்!

Matrix opinion poll results 2026: தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மேட்ரிக்ஸ் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

Published on: March 16, 2026 at 4:37 pm

Updated on: March 16, 2026 at 5:27 pm

சென்னை, மார்ச் 16, 2026: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், மேக்ஸிஸ் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தக் கருத்துக் கணிப்பில் தி.மு.க., அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவும் என்பது தெரியவந்துள்ளது.

டைம்ஸ் நவ் ஆங்கில ஊடகத்தில் வெளியான இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளில், 2026 சட்டமன்ற தேர்தலில் 114-127 சீட்களுடன் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 104-114 சீட்களுடன் தி.மு.க கூட்டணி இரண்டாம் இடம் பிடிக்கும் என்றும், தமிழக வெற்றிக் கழகத்துக்கு 6-12 தொகுதிகள் வாய்ப்பு இருப்பதாகவும், மற்றவை 01-06 தொகுதிகளில் வெல்லலாம் எனவும் இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் யார் ஆட்சி?

இதேபோல் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் என்றும், கேரளத்தில் இடதுசாரிகள் ஆட்சியை மூன்றாவது முறையாக தொடர்வார்கள் என்றும், அஸ்ஸாமில் பா.ஜ.க மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க அதிக வெற்றி கொடுத்தால் அமைச்சர் பதவி.. மு.க ஸ்டாலின்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com