மகளிர் வங்கிக் கணக்கில் ₹9,000 வரவு.. அசாமில் பாஜக அதிரடி

Assam Govt Gives ₹9000 Aid: அசாமில் மகளிர் உதவித்தொகை ரூபாய் 9000 வழங்கப்பட்டுள்ளது; இதன் மூலம் 40 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர்.

Published on: March 11, 2026 at 12:52 pm

கௌஹாத்தி, மார்ச் 11, 2026; அசாமில் மகளிர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு, ஒவ்வொரு கணக்கிலும் ₹9,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

2026 இல் சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கும் அஸ்ஸாமில், மகளிர் உதவித்தொகை மொத்தமாக வரவு வைக்கப்பட்டுள்ளது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது; முதலமைச்சராக ஹிமாந்த பிஷ்வா சர்மா உள்ளார்.

முன்னதாக அசாமில் உள்ள ஒவ்வொரு மகளிரும் பயன்பெறும் வகையில் மகளிர் உதவித் தொகையை பாரதிய ஜனதா கடந்த தேர்தலின் போது அறிவித்தது; அதன்படி மாநிலத்தில் உள்ள மகளிருக்கு மாதம் தோறும் ரூபாய் 1,250 மகளிர் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு முன்னதாக, பயனாளிகள் 40 லட்சம் மகளிருக்கு ரூபாய் ஒன்பதாயிரம் மகளிர் உதவித் தொகையாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

அசாமில் மகளிர் உதவித்தொகை திட்டத்திற்கு ஒருநூதாய் (Orunodoi) என பெயர் வைக்கப்பட்டிருந்தது; மேலும் தேர்தலுக்கு முன்னதாகவே ரேஷனில் பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது மட்டுமின்றி மத்திய அரசின், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 5 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க; சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி… அத்தியாவசிய பொருள்கள் சட்டம் அமல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com