அண்ணா பல்கலை., ஆரம்பாக்கம், கோவை நிகழ்வுகள் இல்லாத தமிழகம் உருவாகும் நாள் தான் உண்மையான மகளிர் நாள்.. மருத்துவர் அன்புமணி ராமதாஸ்!

International women’s Day2026 : அண்ணா பல்கலை., ஆரம்பாக்கம், கோவை நிகழ்வுகள் இல்லாத தமிழகம் உருவாகும் நாள் தான் உண்மையான மகளிர் நாள் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Published on: March 7, 2026 at 10:39 am

சென்னை மார்ச் 7 2026; பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று விடுத்துள்ள மகளிர் வாழ்த்துச் செய்தி அறிக்கையில், “வீட்டையும், நாட்டையும் தாங்கிக் காக்கும் மகளிரைப் போற்றும் உலக மகளிர் தினம் நாளை கொண்டாடப் படும் நிலையில், உலகெங்கும் வாழும் மகளிருக்கு இனிய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “உலகம் எங்குமே பெண்கள் பலவீனமானவர்கள் என்ற பொய்யான நம்பிக்கை நிலவி வருகிறது. ஆண்களைவிட பெண்களுக்குத் தான் போர்க்குணம் அதிகம் ஆகும். ஆண்கள் வென்று விட்டதாக பெருமிதப்பட்டுக் கொண்டாலும், அவர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருப்பது பெண்கள் தான். சங்க காலத்திலிருந்து நிகழ்காலம் வரை இதற்கு ஏராளமான நாயகியரை உதாரணமாகக் கூற முடியும்” என அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, “மகளிருக்கு அதிகாரமும், உரிமையும் அளிப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதை விட 100 மடங்கு முக்கியமானது பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் நடமாடுவதை உறுதி செய்ய வேண்டியதாகும். தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு என்றாலே, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்பாவி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் 8 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும், கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் தான் நினைவுக்கு வருகிறது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 54%, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 % அதிகரித்திருக்கின்றன. பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நிலையில் அவர்களின் முன்னேற்றம், அதிகாரம் பற்றி சிந்தித்துப் பார்க்கவே முடியாது” என சுட்டிக்காட்டி உள்ள அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் அத்தகைய சூழல் விரைவில் ஏற்படுத்தப்பட வேண்டும்; அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அத்தகைய சூழலை ஏற்படுத்துவதற்காக மக்கள் தங்களுக்கு வழங்கப் பட்டுள்ள அதிகாரத்தையும், விலைமதிப்பற்ற உரிமையையும் பயன்படுத்த வேண்டும் என்று கூறி மீண்டும் ஒரு முறை மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க; http://அம்மா, அப்பா பார்க்கும் பெண்ணை திருமணம் செய்யுங்கள்.. விஜய்யின் வீடியோ வைரல்!

தமிழ்நாட்டில் பாஜக வெல்லும்.. வானதி சீனிவாசனிடம் தோற்றவர் கமல்ஹாசன்.. பியூஸ் கோயல் அதிரடி பேட்டி Piyush Goyal

தமிழ்நாட்டில் பாஜக வெல்லும்.. வானதி சீனிவாசனிடம் தோற்றவர் கமல்ஹாசன்.. பியூஸ் கோயல் அதிரடி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com