11 சதவீத தள்ளுபடி.. பட்டியலிடப்பட்ட ஓம்னிடெக் ஐ.பி.ஓ.. முந்துங்க!

Omnitech Engineering IPO: ஒம்னிடெக் என்ஜினியரிங் பலவீனமான முறையில் அறிமுகமாகியள்ளது; இந்நிலையில், இது 11% தள்ளுபடியில் பட்டியலிடப்பட்டுள்ளது.

Published on: March 5, 2026 at 1:53 pm

மும்பை, மார்ச் 5, 2026: ஒம்னிடெக் என்ஜினியரிங் தேசிய பங்குச் சந்தையில் (NSE) ரூ.202-க்கு அறிமுகமானது. இந்நிலையில், இந்த வெளியீட்டு விலையை விட 11% குறைவாக தள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து, இதன் முதல் பங்கு வெளியீடு (IPO) விவரங்கள் மற்றும் முதலீட்டு தேவைகளை பார்க்கலாம்.

ஒம்னிடெக் என்ஜினியரிங் தேசிய பங்குச் சந்தையில் ரூ.202-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது வெளியீட்டு விலையை விட 11% தள்ளுபடி ஆகும். இந்நிலையில், மும்பை பங்குச் சந்தையில் (BSE) பங்கு ரூ.205-க்கு திறக்கப்பட்டது. இது 10% தள்ளுபடி விலை ஆகும். மேலும், வெளியீட்டு விலை ரூ.227 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனம் மொத்தம் ரூ.583 கோடி நிதி திரட்டியுள்ளது. இதில் 1.84 கோடி புதிய பங்குகள் ரூ.418 கோடி மதிப்பில் கிடைத்துள்ளது. மேலும் 0.73 கோடி பங்குகள் ரூ.165 கோடி மதிப்பில் விற்பனைக்கு விடப்பட்டன.

இதையும் படிங்க: பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல்.. இத்தனை லட்சம் கோடிகளா?

ஒம்னிடெக் என்ஜினியரிங் நிறுவனத்தின் முதல் பங்கு வெளியீடு (IPO) பிப்ரவரி 25 அன்று சந்தாதாரர்களுக்கு திறக்கப்பட்டு பிப்ரவரி 27 அன்று மூடப்பட்டது. பங்குகள் ஒதுக்கீடு மார்ச் 2 அன்று இறுதி செய்யப்பட்டது. ஊழியர்களுக்காக 46,296 பங்குகள் ஒதுக்கப்பட்டு, வெளியீட்டு விலையை விட ரூ.11 தள்ளுபடியில் வழங்கப்பட்டது.

ஓம்னிடெக் நிறுவனம்

ஒம்னிடெக் என்ஜினியரிங், உற்பத்தி மற்றும் பொறியியல் தீர்வுகள் வழங்கும் நிறுவனம் ஆகும். இது, பல்வேறு துறைகளுக்கான தனிப்பயன் இயந்திர அமைப்புகளை வழங்குவதில் சிறப்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 1.4% உயர்வு.. இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com