ஒவ்வொரு குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம். எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Edappadi Palanisamy: அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத்தொகையாக ரூ.10,000 வழங்கப்படும் என முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Published on: February 24, 2026 at 5:29 pm

சென்னை, பிப்.24, 2026: அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத்தொகையாக ரூ.10,000 வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அப்போது, “அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத்தொகையாக ரூ.10,000 வழங்கப்படும்” என்றார். தொடர்ந்து இதில் உள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து பார்க்கலாம்.

  • ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்போடு சேர்த்து 1000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும்.
  • மீன்பிடித் தடைக்காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை 8000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட்டில் இருந்து 1400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
  • நகரப் பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  • வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 2000 ரூபாயும், வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கும் 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 1000 ரூபாயும் வழங்கப்படும்.

இவ்வாறு பல்வேறு நலத்திட்டங்கள் அ.தி.மு.க.வின் 3ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளில் வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: TTV தினகரன் மீது உச்சபட்ச மரியாதை.. ஓ. பன்னீர் செல்வம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com