என் உயரம் எனக்குத் தெரியும்.. கருணாநிதியை நினைவு படுத்திய மு.க ஸ்டாலின்!

MK Stalin: இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்குவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் என் உயரம் எனக்குத் தெரியும் என கூறினார்.

Published on: February 24, 2026 at 1:02 pm

சென்னை பிப்ரவரி 24, 2026; 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது; இந்த நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் திடீர் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன. திமுக கூட்டணியில் நீண்ட நாட்களாக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் அதிகாரம் கேட்கிறது. காங்கிரசின் இந்த கோரிக்கைக்கு திமுக சாதகமான பதிலை இதுவரை அளிக்கவில்லை; முதலில் திமுக மூத்த தலைவரும் அமைச்சருமான ஐ. பெரியசாமி, ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு அளிக்கும் விருப்பம் திமுகவுக்கு இல்லை; தமிழ்நாட்டைப் பொருத்தவரை அது சாதகமாகவும் அமையாது” என கூறினார்.

எனினும் காங்கிரஸில் உள்ள மாணிக்கம் தாகூர் எம்பி உள்ளிட்ட சிலர் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் திமுக காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்புகள் தொடர்ந்து காணப்பட்டனர்.

இதையும் படிங்க; உதய சூரியன் சின்னத்தில் போட்டி.. 5 தொகுதிகள் கோரிக்கை.. ஜவாஹிருல்லா

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான MK ஸ்டாலின் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு அளிக்க மாட்டோம் என உறுதிப்பட தெரிவித்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், மு க ஸ்டாலின் பேச்சுக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்தனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மணிசங்கர் அய்யர், இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்கும் அளவுக்கு மு.க ஸ்டாலினுக்கு தகுதி உள்ளது எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இடம், இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின் என் உயரம் எனக்குத் தெரியும் என கடந்த காலத்தில் இதே போன்ற கேள்வியை கருணாநிதி எதிர்கொண்ட போது அவர் அளித்த பதிலை இவரும் நினைவு படுத்தினார்.

இதையும் படிங்க; தி.மு.க, மக்கள் நீதி மய்யம் தொகுதி பங்கீடு பேச்சு மாற்றம்.. முழு விவரம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com