Kamal Haasan: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தி.மு.க. வேறொரு தொகுதிக்கு மாற்றியுள்ளது.
Kamal Haasan: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தி.மு.க. வேறொரு தொகுதிக்கு மாற்றியுள்ளது.

Published on: February 24, 2026 at 11:31 am
சென்னை, பிப்.24, 2026: மக்கள் நீதி மய்யம், தி.மு.க. உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (திங்கள்கிழமை) நடைபெற இருந்த நிலையில், இன்னொரு தேதிக்கு பேச்சுவார்த்தை மாற்றப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
தி.மு.க. கூட்டணி கட்சிகள் இடையேயான, தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் நடக்கிறது. இந்த நிலையில், இன்று கடந்த முறை 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட்ட நிலையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை எனக் கூறப்படுகிறது. அதாவது, தனிச்சின்னத்தில் போட்டியிட வைகோ விரும்புவதாக கூறப்படுகிறது.
ம.நீ.ம பேச்சுார்த்தை மாற்றம்
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியுடனாக பேச்சுவார்த்தை இன்று மாற்றப்பட்டது. அதன்படி, திமுக-மக்கள் நீதி மய்யம் கட்சி இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை பிப்ரவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை நடக்கவிருந்த நிலையில் தேதி மாற்றப்பட்டுள்ளது அக்கட்சி தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸூக்கு மாநிலங்களவை சீட்.. கனிமொழியை சந்தித்த பின் கிரிஷ் சோடங்கர் பேட்டி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com