மெக்ஸிகோ தாதா, போதைப்பொருள் கடத்தல் மன்னன் சுட்டுக் கொலை.. பரபரப்பு தகவல்கள்!

El Mencho: சக்திவாய்ந்த போதைப்பொருள் கும்பல் தலைவரான நெமேசியோ எல் மெஞ்சோ ஒசேகுவேரா (59) ஒரு சிறப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டார் என மெக்சிகோ ராணுவம் அறிவித்துள்ளது.

Published on: February 23, 2026 at 1:30 pm

ஜாலிஸ்கோ, பிப்.23, 2026: போதைப்பொருள் கும்பல் தலைவரான நெமேசியோ எல் மெஞ்சோ ஒசேகுவேரா (59) ஞாயிற்றுக்கிழமை (பிப்.22, 2026) கொல்லப்பட்டார் என அந்நாட்டின் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜாலிஸ்கோ மாநிலத்தின் டபால்பா நகரத்தில் நடந்த என்கவுன்ட்டர் நடவடிக்கையில் நெமேசியோ எல் மெஞ்சோ ஒசேகுவேரா கொல்லப்பட்டுள்ளார்.

இது குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில், “ராணுவத்துடன் நடந்த மோதலில் காயமடைந்த அவர், மெக்சிகோ சிட்டிக்கு விமானத்தில் கொண்டு செல்லும் போது உயிரிழந்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அவரின் தலைக்கு $15 மில்லியன் அறிவித்து இருந்தது. இதற்கிடையில், மெக்சிகோ இராணுவம், அமெரிக்க அதிகாரிகளின் உதவி தகவல்களுடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையில், ஒசேகுவேரா உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்; 3 வீரர்கள் காயமடைந்தனர். மேலும், 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்; ராக்கெட் லாஞ்சர்கள் உட்பட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எல் மெஞ்சோ குஸ்மான் மற்றும் இஸ்மாயேல் சாம்படா கைது செய்யப்பட்டதற்கு பிறகு, மெக்சிகோவில் வீழ்த்தப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் கும்பல் தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கணவரின் அனுமதி இன்றி உறவினர் வீட்டுக்கு சென்றால் 3 மாதம் சிறை.. ஆப்கானிஸ்தானில் புதிய சட்டம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com