மேற்கு வங்காள சாணக்கியர்.. மம்தா பானர்ஜி நெருங்கிய நண்பர்.. முகுல் ராய் மரணம்!

Mukul Roy: முன்னாள் ரயில்வே அமைச்சர் முகுல் ராய் மரணம் தனது 71வது வயதில் மரணம் அடைந்தார்.

Published on: February 23, 2026 at 1:03 pm

கொல்கத்தா, பிப்.23, 2026: முன்னாள் ரயில்வே அமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான முகுல் ராய் ஞாயிற்றுக்கிழமை (பிப்.23, 2026) அதிகாலை 1:30 மணிக்கு இதய நோயால் காலமானார். அவர் கொல்கத்தா சால்ட் லேக் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார். கடந்த சில ஆண்டுகளாக அவர் நினைவிழப்பு மற்றும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். சில நாள்களுக்கு முன்பு அவர் கோமாவில் சென்றிருந்தார்.

இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. தொடர்ந்து, அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரால் வழக்கமான முகங்களை கூட அடையாளம் காண முடியவில்லை. இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட பின் திங்கட்கிழமை இறுதி சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மார்ச் 11-ல் திருச்சி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.. முழு விவரம்!

முகுல் ராய் வாழ்க்கை

முகுல் ராய் மேற்கு வங்காளத்தில் உள்ள வட 24 பர்கானாஸ் மாவட்டம் காஞ்சராபாரா பகுதியில் ஏப்ரல் 17, 1954 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் பெற்றோர் ஜுகல் நாத் ராய், ரேகா ராய் ஆகியோர் ஆவார்கள்.
இந்நிலையில், முகுல் ராய், மம்தா பானர்ஜியின் நெருங்கிய நண்பராக இருந்தவர். பின்னர் திரிணாமூல் காங்கிரஸின் முக்கிய தலைவராக வளர்ந்தார்.

அவரது மறைவு மேற்கு வங்காள அரசியலில் ஒரு முக்கியமான இழப்பாகும். இவர் கடைசி காலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். மேலும், இவர் மேற்கு வங்காளத்தில் சாணக்கியர் என அறியப்பட்டவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டெல்லியில் சட்டையை கழற்றி இளைஞர் காங்கிரஸ் போராட்டம்.. 10 பேர் கைது!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com