Hema Committee report |
பாலியல் குற்றவாளிகளை பினராய் அரசு பாதுகாக்கிறது” என காங்கிரஸ் தலைவர் சுதாகரன் குற்றஞ்சாட்டினார்.
Hema Committee report |
பாலியல் குற்றவாளிகளை பினராய் அரசு பாதுகாக்கிறது” என காங்கிரஸ் தலைவர் சுதாகரன் குற்றஞ்சாட்டினார்.
Published on: September 10, 2024 at 10:38 pm
Hema Committee report | ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர்கள், கொலைகாரர்கள், குற்றவாளிகள் ஆகியோரை கம்யூனிஸ்ட் அரசு பாதுகாத்து வருகிறது.
உயர் நீதிமன்றத்தின் விமர்சனம் யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு அரசிடம் பதில் இருக்கிறதா? பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு இல்லையா?
ஹேமா கமிட்டி அறிக்கையில் உள்ள தகவல்கள் குறித்து விசாரணை நடத்த அரசு இன்னும் தயாராகவில்லை. ஹேமா கமிட்டி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள்.
முதலில், அவர்களை பாதுகாக்க, அறிக்கை வெளியிடப்படாமலும், நடவடிக்கை எடுக்காமலும் தாமதப்படுத்தப்பட்டது. ஹேமா கமிட்டி அறிக்கை, பெண்களின் பெருமை மற்றும் உரிமைகளை இழக்கும் உண்மைச் சித்திரத்தை வரைந்துள்ளது. ஆனால் பினராயி அரசு என்ன செய்தது?” என காங்கிரஸ் கட்சியின் கேரள மாநிலத் தலைவர் கே. சுதாகரன் கேள்வியெழுப்பி உள்ளார்.
ஹேமா கமிட்டி அறிக்கை மூலமாக நடிகைகள் மற்றும் பெண்களுக்கு சினிமா துறையில் அளிக்கப்பட்ட பாலியல் தொந்தரவுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் பல முன்னணி நடிகர்கள் மீதும் புகார்கள் பதியப்பட்டுள்ளன.
மூத்த நடிகர் சித்திக், கேரள கம்யூனிஸ்ட் எம்.எல்.யும் நடிகருமான முகேஷ் உள்ளிட்ட பலர் மீதும் புகார்கள் பதியப்பட்டுள்ளன. மேலும், சில மூத்த நடிகர்களின் படங்களில் கூட தங்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக புகார் கூறியுள்ளனர். இதனால், கேரள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கேரளத்தில் அடுத்தடுத்து பாலியல் புகார்கள்: பெண் நீதிபதி அமர்வு அமைக்க உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com