Chennai | சென்னையில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், 3 நாள்களில் 334 பேர் கைது செய்யப்பட்டனர்.
Chennai | சென்னையில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், 3 நாள்களில் 334 பேர் கைது செய்யப்பட்டனர்.
Published on: September 10, 2024 at 10:20 pm
Chennai | சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், சென்னை பெருநகரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிராக சிறப்பு அதிரடி சோதனைகள் மேற்கொண்டு கைது செய்ய உத்தரவிட்டார்.
இதன்பேரில், கடந்த 06.09.2024 முதல் 08.09.2024 வரையிலான 3 நாள்கள் “போதை தடுப்பு நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த அதிரடி நடவடிக்கையினால், 3 நாள்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தொடர்பாக 195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 334 குற்றவாளிகளை கைது செய்யப்பட்டனர்.
இவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், 58 சரித்திரப்பதிவேடு போக்கிரிகள் அடங்குவர்.
இவர்களில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க : ராதாபுரத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பா.ஜ.க நிர்வாகி மீது வழக்குப்பதிவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com