52வது ஜி7 உச்சி மாநாடு.. பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் அழைப்பு!

G7 Summit in France: 52வது ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.

Published on: February 18, 2026 at 10:55 am

புதுடெல்லி, பிப்.18, 2026: பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை 2026 ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைமையில் நடைபெறவுள்ள 52வது ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியான அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில், “பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், G7 மாநாட்டிற்கு முன்பாக இந்தியா–பிரான்ஸ் இடையே சிறப்பு சந்திப்பு நடத்தி, சர்வதேச அஜெண்டாவில் ஒப்பந்தம் எட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் மேக்ரோன், “இந்தியா பிரிக்ஸ் (BRICS) மாநாட்டைத் தலைமை தாங்கும் நிலையில், பிரான்ஸ் ஜி7 குழுவைத் தலைமை தாங்குகிறது. இந்நேரம் இரு நாடுகளின் இளைஞர்களுக்கான புதுமை மற்றும் கூட்டாண்மை வளர்ச்சிக்கு முக்கியமான தருணமாக அமைய வேண்டும்” என்றார்.

ஜி7 உச்சி மாநாடு

G7 உச்சி மாநாடு என்பது ஆண்டுதோறும் நடைபெறும் உலகின் முக்கிய நாடுகளின் தலைவர்களின் கூடுகையாகும். இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பங்கேற்கின்றன. கடந்த ஆண்டு, கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி G7 மாநாட்டில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டெல்லியில் ஏ.ஐ மாநாடு.. உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com