TVK Arun Raj : தி.மு.க. அரசின் கடைசி பட்ஜெட் என்பதால், நிதியமைச்சர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பாராட்டு மழையில் நனைய வைத்துள்ளார் த.வெ.க நிர்வாகி தெரிவித்துள்ளார்
TVK Arun Raj : தி.மு.க. அரசின் கடைசி பட்ஜெட் என்பதால், நிதியமைச்சர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பாராட்டு மழையில் நனைய வைத்துள்ளார் த.வெ.க நிர்வாகி தெரிவித்துள்ளார்

Published on: February 17, 2026 at 8:36 pm
சென்னை, பிப்.17, 2026: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்.17) தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட் குறித்து பல்வேறு தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில், கடைசி பட்ஜெட் என்பதால் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பாராட்டு மழையில் நனைய வைத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அருண் ராஜ்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், “தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தற்பெருமைகளே அதிகம் இருந்தன; கடைசி பட்ஜெட் என்பதால் முதல்வரை பாராட்டு மழையில் நனைய வைத்துள்ளார் நிதி அமைச்சர் தமிழகத்தின் மொத்த கடன் 2027 மார்ச்சில் ரூ.10.62 லட்சம் கோடி என்ற அதிர்ச்சி தகவலை சொல்லியுள்ளனர். மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாத திமுக அரசு எதற்கு இத்தனை கோடி கடன் வாங்கியது? எனவும் கேள்வியெழுப்பினார்.
மேலும், “பட்ஜெட்டுக்கு ஜீரோ மதிப்பெண் மட்டுமே தர முடியும்; திமுக அரசின் கடைசி பட்ஜெட் என்பதுதான் ஆறுதல்” எனவும் அவர் தெரிவித்தா
இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு கோர காங்கிரஸூக்கு உரிமை உண்டு.. தொல். திருமாவளவன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com