Hampi Gang Rape Murder Case: கர்நாடகாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி பாலியல் வன்கொமை செய்யப்பட்ட வழக்கில் மூவருக்கு தூக்குத் தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
Hampi Gang Rape Murder Case: கர்நாடகாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி பாலியல் வன்கொமை செய்யப்பட்ட வழக்கில் மூவருக்கு தூக்குத் தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

Published on: February 17, 2026 at 4:53 pm
பெங்களூரு, பிப்.17, 2026: கர்நாடக மாநிலம் ஹம்பி அருகே 2025-இல் நடந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 27 வயதான இவர், மல்லேஷ் என்ற ஹந்திமால், சாய் மற்றும் ஷரனப்பா ஆகியோரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த கர்நாடக மாநிலம் கங்காவதி முதல் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி சதானந்தா நாகப்பா நாயக் மேற்கூறிய மூவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
என்ன நடந்தது?
துங்கப்பத்திரா நதிக்கரையில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி, தனது தோழி மற்றும் அமெரிக்கா, ஒடிசா மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த ஐவருடன் அமர்ந்திருந்தார். அப்போது அவர்கள் ஹிட்டார் இசைக்கருவியில் இசையை மீட்டிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அந்த வழியாக வந்த மல்லேஷ் என்ற ஹந்திமால், சாய் மற்றும் ஷரனப்பா ஆகியோர் அருகில் பெட்ரோல் பங்க் எங்குள்ளது எனக் கேட்டு, அவர்களிடம் பேச்சு கொடுத்து, அங்கிருந்தவர்களை ஆற்றில் தள்ளி, இஸ்ரேலிய பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்கள்.
இதில் ஆற்றில் தள்ளப்பட்ட மூவரில் ஒடிசாவை சேர்ந்த நபர் நீரில் மூழ்கி மரணம் அடைந்தார். மேலும், இருவர் ஆற்றில் நீந்தி கரை சேர்ந்தனர். உயிரிழந்த ஒடிசா இளைஞரின் உடல் மறுநாள் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்.. பிரான்ஸ் அதிபர் மனைவி அஞ்சலி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com