திமுக ஆட்சியில் ஏழை எளியோருக்கு பாதுகாப்பு இல்லை.. விஜய்

Vijay: திமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டியுள்ளார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்.

Published on: February 14, 2026 at 8:57 pm

சென்னை பிப்ரவரி 14, 2026; திருச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட நிலையில் இதனைச் சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என திமுக அரசை விமர்சித்துள்ளார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்.

திருச்சி அரசு மருத்துவமனையில், தாயின் அருகே இருந்த பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் போலீசார் துரித நடவடிக்கை எடுத்து கடத்தப்பட்ட குழந்தையை 5 மணி நேரத்தில் மீட்டனர். முன்னதாக தாயின் பரிதவிப்பை உணர்ந்து இந்த குழந்தையை, உடனடியாக மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வலியுறுத்தி இருந்தார்.

மேலும், திமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சித்த விஜய், கடத்தப்பட்ட குழந்தையை விரைந்து மீட்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இதையும் படிங்க; த.வெ.க சேலம் பேரணியில் சோகம்.. தொண்டர் உயிரிழப்பு!

திருச்சி மருத்துவமனையில் என்ன நடந்தது?

திருச்சி மருத்துவமனையில் பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டது; மருத்துவமனை சீருடை அணிந்து வந்த பெண் ஒருவர் குழந்தைக்கு தடுப்பூசி போட வந்துள்ளதாக கூறி கடத்திச் சென்றார்.

இந்தச் சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட இந்த நிலையில் 5 மணி நேரத்தில் போலீசார் கடத்தப்பட்ட குழந்தையை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; தமிழ்நாட்டின் எஃகு மனிதர் மு.க ஸ்டாலின்.. கனிமொழி

ஓட்டுனர், நடத்துனர் நியமன போட்டித்தேர்வு..இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதா… அன்புமணி கேள்வி
Anbumani Ramadoss

ஓட்டுனர், நடத்துனர் நியமன போட்டித்தேர்வு..இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதா… அன்புமணி கேள்வி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com