இந்தியாவில் ஜியோமி 17 சீரிஸ்.. விலை என்னவாக இருக்கும்?

Xiaomi 17 Series: செல்போன் நிறுவன அறிக்கைகளின் படி, ஜியோமி 17 சீரிஸ் இந்தியாவிலும் உலகளாவிய அளவிலும் இன்னும் சில வாரங்களில் வெளியிடப்பட உள்ளது.

Published on: February 14, 2026 at 12:05 pm

புதுடெல்லி, பிப்.14, 2026: ஜியோமி நிறுவனத்தின் அறிக்கைகளின் படி, Xiaomi 17 Series இந்தியாவிலும் உலகளாவிய அளவிலும் இன்னும் சில வாரங்களில் வெளியிடப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, Xiaomi தனது புதிய 17 Series flagship போன்களை கடந்த ஆண்டு செப்டம்பரில் சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதற்கிடையில், இந்தியா மற்றும் பிற பகுதிகளில் வெளியீடு வழக்கத்திற்கு மாறாக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், இந்தியாவில் இந்த புதிய ஜியோமி போன்களுக்கு எவ்வளவு செலுத்த வேண்டி வரும் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. அதன்படி, ஜியோமி 17 இந்தியாவில் சுமார் ₹80,000 ஆக இருக்கலாம் என்றும் Xiaomi 17 Ultra சுமார் ₹1,25,000 ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதாவது, Xiaomi 15 Series-ஐ விட 17 Series விலை அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்திய சந்தையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற முன்னணி பிராண்டுகளுடன் போட்டியிடுவது சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், ஜியோமி 17 சீரிஸ் போன்கள் 2026 மார்ச் மாதம் வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒலா எலக்ட்ரிக் சி.எஃப்.ஓ பதவி விலகல்.. புதிய சி.எஃப்.ஓ யார்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com