ராணி முகர்ஜி மாறுபட்ட நடிப்பில் மர்தானி 3.. இந்திய அளவில் எப்படி?

Mardaani 3 Box Office Collection: 1990களில் பாலிவுட் கனவு கன்னியாக வலம் வந்த ராணி முகர்ஜியின் மாறுபட்ட நடிப்பில் மர்தானி 3 திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இந்தப் படத்தின் வகூல் நிலவரம் எப்படி?

Published on: February 9, 2026 at 2:07 pm

மும்பை, பிப்.9, 2026: ராணி முகர்ஜி நடித்த மர்தானி 3 திரைப்படம், நல்ல தொடக்கத்திற்குப் பிறகு தினசரி வசூலில் ரூ.1.85 கோடி முதல் ரூ.2.75 கோடி வரை பெற்றுள்ளது. அந்த வகையில், இப்படம் ஒன்பதாவது நாளான சனிக்கிழமையில் படம் ரூ.2.75 கோடி வசூலித்துள்ளது. எனினும், எட்டாவது நாள் (இரண்டாவது வெள்ளி) வசூல் ரூ.1.85 கோடியாக இருந்தது. அதற்கு முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது பெரிய மாற்றமில்லை. ஆனால் ஒன்பதாவது நாளில் (இரண்டாவது சனி) வசூல் 48.65% உயர்ந்து ரூ.2.75 கோடியாக அதிகரித்தது.

தொடர்ந்து, மர்தானி 3 திரைப்படம் சனிக்கிழமையன்று மொத்தமாக 20.49% ஹிந்தி பார்வையாளர் வருகையைப் பதிவு செய்தது. மர்தானி 3 கட்டுப்படுத்தப்பட்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும், மர்தானி 2-ஐ விட இரட்டிப்பு செலவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், ராணி முகர்ஜி நடித்துள்ள இப்படம் மீண்டும் வேகமடைந்து, இந்தியாவில் ரூ.30 கோடி வசூல் மைல்கல்லை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ரூ.500 கோடி வசூல்? சன்னி தியோல் காட்டில் மழை.. பார்டர்-2 பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com