ரஷ்ய பல்கலைக்கழகத்தில் கத்தியால் தாக்குதல்.. 4 இந்தியர்கள் காயம்!

Russia University Attack: ரஷ்யாவின் பல்கலைக்கழகத்தில் கத்தியால் தாக்கப்பட்டப்பட்ட நிகழ்வில் இந்தியர்கள் 4 பேர் காயமுற்றனர்.

Published on: February 8, 2026 at 2:11 pm

மாஸ்கோ, பிப்.8, 2026: ரஷ்யாவில், பாஷ்கோர்டோஸ்தான் குடியரசின் உஃபாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உட்பட பலர் காயமடைந்தனர். துரதிர்ஷ்டவசமான இத்தாக்குதலில், நான்கு இந்திய மாணவர்கள் காயமடைந்ததாக ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், “ரஷ்ய அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. காயமடைந்த மாணவர்களுக்கு உதவி வழங்க கசானில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் உஃபாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ரஷ்ய பல்கலைக்கழக தாக்குதலில் காயமடைந்த நான்கு பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக ரஷ்ய மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, கத்தியுடன் ஆயுதம் ஏந்திய ஒரு டீனேஜர் உஃபாவில் உள்ள அரசு மருத்துவ பல்கலைக்கழக விடுதிக்குள் நுழைந்தார்.ஷ
இந்நிலையில் அங்கு கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாக்குதல் நடத்திய 15 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டவர், உள்ளூர் குழந்தைகள் மருத்துவமனையிலும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பாஷ்கோர்டோஸ்தான் குடியரசின் தலைநகரான உஃபாவில் உள்ள அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘நிபா வைரஸ் அரிதானது, அதேநேரம் ஆபத்தானது’.. உலக சுகாதார தலைவர்!

கர்நாடக இசையால் அவமதிக்கப்படும் கானா? மீசைய முருக்கு 2 எப்படி இருக்கு? திரை விமர்சனம்! Meesaya Murukku 2 Review

கர்நாடக இசையால் அவமதிக்கப்படும் கானா? மீசைய முருக்கு 2 எப்படி இருக்கு? திரை

Meesaya Murukku 2 Review: ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கிய மீசைய முருக்கு 2 படம், கானா இசையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டாலும், அதன் கதை…

25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவு.. வெள்ளி வென்றார் ஈஷா சிங்! Esha Singh

25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவு.. வெள்ளி வென்றார் ஈஷா சிங்!

Esha Singh: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-இல் இந்தியாவின் இளம் துப்பாக்கி சுடும் வீராங்கனை ஈஷா சிங், பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் வெள்ளிப்…

தினேஷின் புதிய படம் பந்தா காங்க்ஸ்.. ரசிகர்களிடம் எகிறும் எதிர்பார்ப்பு! Panda Gangs

தினேஷின் புதிய படம் பந்தா காங்க்ஸ்.. ரசிகர்களிடம் எகிறும் எதிர்பார்ப்பு!

Panda Gangs: தினேஷின் புதிய படம் “பந்தா காங்க்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது….

அதிகாரம், ஆதிக்கம் சமூகத்தை பாதிக்கும்.. போப் ஆண்டவர் செய்தி! Pope Leo

அதிகாரம், ஆதிக்கம் சமூகத்தை பாதிக்கும்.. போப் ஆண்டவர் செய்தி!

Pope Leo: போப் லியோ ஐரோப்பிய நாடுகளை கிறிஸ்தவ வேர்களை மீண்டும் நினைவுகூர்ந்து, மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்….

கடைசி நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்ட ஹரிதா பத்ரா.. வெண்கல பதக்கம் வென்று அசத்தல்! Haritha Bhadra

கடைசி நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்ட ஹரிதா பத்ரா.. வெண்கல பதக்கம் வென்று அசத்தல்!

Haritha Bhadra: இந்தியாவின் இளம் தடகள வீராங்கனை ஹரிதா பத்ரா, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்….

பகத்சிங் பிறந்த தினம்.. பிரதமர் நரேந்திர மோடி மரியாதை! Narendra Modi

பகத்சிங் பிறந்த தினம்.. பிரதமர் நரேந்திர மோடி மரியாதை!

Narendra Modi: விடுதலை வீரர் பகத்சிங் பிறந்தநாள் விழாவில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்….


Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com