அண்ணா என்ற பசு மீது அமர்ந்திருக்கும் காக்கா.. திமுக குறித்து அண்ணாமலை!

Annamalai Targets DMK: திமுக நிறுவனர் அண்ணா என்ற பசு மீது அமர்ந்திருக்கும் காக்கா தான் இன்றைய திமுக என விமர்சித்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை.

Published on: February 3, 2026 at 4:26 pm

Updated on: February 3, 2026 at 4:27 pm

சென்னை பிப்ரவரி 3, 2026; திமுக நிறுவனர் அண்ணா ஆட்சியில், ஊழல் இல்லை என கூறிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ” அண்ணா என்ற பசு மீது அமர்ந்திருக்கும் காக்கா தான் இன்றைய திமுக” எனவும் விமர்சித்தார்.
தொடர்ந்து இன்றைய திமுக ஆட்சி மக்களிடமிருந்து பிடுங்கி தின்கிறது; அண்ணாவின் குடும்பம் அரசியல் பக்கமே வரவில்லை.

ஆனால் இன்று முதல்வர் அவரது மகன் பேரன் என அனைவரும் அரசியலுக்கு வந்து அண்ணாவின் வழியை பின்பற்றுகிறோம் எனக் கூறுகிறார்கள். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அன்று ஊழல் இல்லை இன்று ஊழல் இருக்கிறது” என்றார்.

அமைச்சர்களுக்கு அண்ணாவைப் பற்றி தெரியாது

தொடர்ந்து திமுக அமைச்சர்களை விமர்சித்த அண்ணாமலை, ” திமுக அமைச்சர்களுக்கு அண்ணாவைப் பற்றி எதுவும் தெரியாது; அவரைப் பற்றி ஒரு பத்து வரிகள் எழுதுங்கள் என்று சொன்னால் திணறுவார்கள். அண்ணா அண்ணா என அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் மட்டும் பேசுவார்கள்” என்றார்.

தேர்தல் பொறுப்பு குறித்து விளக்கம்

தேர்தல் தொகுதி பொறுப்பு குறித்து விளக்கம் அளித்த அண்ணாமலை, “கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன்; இந்த நேரத்தில் என் தந்தையின் உடல்நிலையை நான் பார்த்துக்கொள்ள வேண்டும்; எனவேதான் அதிகமாக கோவை பகுதியில் இருக்கிறேன்; தந்தை டயாலிசிஸில் இருக்கிறார்; அவரை பார்த்துக்கொள்வது எனது முதல் கடமை

அதனால், அடிப்படை வேலைகளை என்னால் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை; அதிகமாக டிராவல் செய்ய முடியாது என்ற வேண்டுகோளை வைத்துள்ளேன்; கட்சியும் அதனை ஏற்றுக்கொண்டு வேறுவேறு பொறுப்பாளர்களை நியமிப்பார்கள்” என்றார்.

பரப்புரை சொல்வேன்

தொடர்ந்து, “அதேநேரத்தில் பிரசாரம், வேறு என்ன சொல்கிறார்களோ அதை செய்யத் தயாராக இருக்கிறேன்; கட்சி, பாஜக வேட்பாளர்களுக்கு என்ன வேலை செய்ய வேண்டும். அதிமுக உட்பட கூட்டணி கட்சிக்கு என்ன வேலை செய்ய வேண்டும் என்று கட்சி சொல்வதை செய்வோம்” எனவும் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார்.

இதையும் படிங்க; சீரழித்த சினிமா.. டீ கடையில் வேலை.. சென்னையில் தாய்-மகனுக்கு நேர்ந்த கொடுமை!

2026 பிரிக்ஸ் மாநாடு: முக்கிய சாதனைகள் என்ன? இனி எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் எவை? BRICS 2026

2026 பிரிக்ஸ் மாநாடு: முக்கிய சாதனைகள் என்ன? இனி எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்

BRICS 2026: 2026 பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய சாதனைகள் மற்றும் இனி எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்து பார்க்கலாம்….

டாஸ்மாக் ஊழியர்களுக்கு புதிய சீருடை திட்டம்; ரூ.20 ஆயிரம் முன்பணம்! New Uniforms for Tasmac Employees

டாஸ்மாக் ஊழியர்களுக்கு புதிய சீருடை திட்டம்; ரூ.20 ஆயிரம் முன்பணம்!

New Uniforms for Tasmac Employees: டாஸ்மாக் ஊழியர்களுக்கு புதிய சீருடை திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. மேலும், ஊழியர்களுக்கு முன்பணமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்பட உள்ளது….

தமிழ்நாட்டில் ஜில்ஜில் ஆகப்போகும் 21 மாவட்டங்கள்.. தஞ்சை இருக்கு.. முழு விவரம்! Rain Alert

தமிழ்நாட்டில் ஜில்ஜில் ஆகப்போகும் 21 மாவட்டங்கள்.. தஞ்சை இருக்கு.. முழு விவரம்!

Rain Alert: தமிழ்நாட்டில் செப்.21ஆம் தேதி திங்கள்கிழமை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது….

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் திறக்கப்படுமா? அமைச்சர் பரபரப்பு பதில்! C.D. Nirmal Kumar

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் திறக்கப்படுமா? அமைச்சர் பரபரப்பு பதில்!

C.D. Nirmal Kumar: தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் பதிலளித்தார்….

நடிகை மஞ்சு வாரியர் அவதூறு வழக்கு.. மலையாள இயக்குனருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்! Manju Warrier

நடிகை மஞ்சு வாரியர் அவதூறு வழக்கு.. மலையாள இயக்குனருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

Manju Warrier: நடிகை மஞ்சு வாரியரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில், திரைப்பட இயக்குநர் சனல் குமார் சசிதரன் உள்ளிட்டோருக்கு எதிராக மஞ்சு வாரியர் வழக்கு தொடர்ந்துள்ளார்….

டி20 தரவரிசையில் முதலிடத்தை இழந்த இந்தியா.. மீண்டு(ம்) உச்சியில் இங்கிலாந்து! T20I Rankings

டி20 தரவரிசையில் முதலிடத்தை இழந்த இந்தியா.. மீண்டு(ம்) உச்சியில் இங்கிலாந்து!

T20I Rankings: டி20 சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை இழந்துள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com