ஹஜ் பயண நடைமுறை.. ஜன.25வரை நீட்டிப்பு.. மத்திய அரசு

Hajj 2026: ஹஜ் பயணத்திற்கான தேவையான நடைமுறைகளை நிறைவு செய்ய கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, இந்த மாதம் 25ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Published on: January 16, 2026 at 12:58 pm

புதுடெல்லி, ஜன.16, 2026: மத்திய சிறுபான்மை அமைச்சகம், ஹஜ் யாத்திரிகர்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஹஜ் பயணத்திற்கான தேவையான நடைமுறைகளை நிறைவு செய்ய கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கருத்தில் கொண்டு, அமைச்சகம் இந்த மாதம் 25ஆம் தேதி வரை ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் இறுதி நீட்டிப்பை அறிவித்துள்ளது.

மேலும், எந்த சூழ்நிலையிலும் இதற்கு அப்பால் மேலும் நீட்டிப்பு வழங்கப்படாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட காலப்பகுதியில், யாத்திரிகர்கள் தங்களின் முன்பதிவுகளை முடிக்க வேண்டும்.

தொடர்ந்து, செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டுகளை இந்திய ஹஜ் கமிட்டி அல்லது தொடர்புடைய ஹஜ் குழு அமைப்பாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நுசுக் (Nusuk) போர்டலில் பதிவு செய்து பயணத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 510 ஜிகாவாட் ஆக உயர்வு.. மின் உற்பத்தித்திறன் இரட்டிப்பு.. மனோகர் லால் கட்டார்

திருமண பாலியல் வன்முறை.. மனைவியை கணவன் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்ட முடியுமா? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
Marital Rape Exception

திருமண பாலியல் வன்முறை.. மனைவியை கணவன் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்ட முடியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com