Puducherry: நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்பட பேனர் விழுந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் காயம் அடைந்த விவகாரத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
Puducherry: நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்பட பேனர் விழுந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் காயம் அடைந்த விவகாரத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

Published on: January 9, 2026 at 2:59 pm
புதுச்சேரி ஜனவரி 9, 2026: புதுச்சேரி மாநிலத்தில் ஜனநாயகன் திரைப்படத்தின் பேனர் திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து பேனர் வைத்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இந்த பேனர் சரிந்து விழுந்த விபத்து புதுச்சேரியின் தபால்காரர் வீதியில் நிகழ்ந்துள்ளது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தனசேகரன் என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அவர் மீது பேனர் விழுந்தது. இதில் நிலை தடுமாறிய அவர் அருகில் இருந்த வாய்க்காலில் விழுந்தார்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரை கைது செய்துள்ளனர். அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜயின் கடைசி திரைப்படமாக ஜனநாயகன் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் படத்தின் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை; இதனால் பட வெளியீடு தாமதமாகிறது என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் தீர்ப்பு இன்று (ஜனவரி 9, 2026) சென்னை உயர் நீதிமன்றத்தில் வெளியாகிறது. முன்னதாக ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க;மரவள்ளி கிழங்குக்கு விலை நிர்ணயம்.. அன்புமணி இராமதாஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com