வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா நல்லடக்கம்.. ஜெய்சங்கர் பங்கேற்பு!

Former Bangladesh PM Begum Khaleda Zia in Dhaka: வங்க தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா நல்லடக்க நிகழ்வில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.

Published on: December 31, 2025 at 5:08 pm

டாக்கா, டிச.31, 2025: வெளிநாட்டு விவகாரங்கள் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இன்று (புதன்கிழமை) காலை டாக்காவுக்கு வந்து, வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் மற்றும் வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) தலைவரான பேகம் கலீதா ஜியாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.

ஜெய்சங்கர் சென்ற சிறப்பு விமானம் டாக்காவின் ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கு வங்கதேசத்தின் இந்திய தூதரக அதிகாரி பிரணய் வெர்மா மற்றும் இந்திய உயர் தூதரக அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.

கலீதா ஜியாவின் இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு தலைநகரின் மாணிக் மியா அவென்யூவில் நடைபெற்றது.இதில், பல்வேறு நாடுகளின் வெளிநாட்டு பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் முன்னாள் பிரதமருக்கு இறுதி மரியாதை செலுத்த பங்கேற்றனர்.

இதையும் படிங்க : வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் மரணம்.. யார் இந்த கலீதா ஜியா!

ஓட்டுனர், நடத்துனர் நியமன போட்டித்தேர்வு..இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதா… அன்புமணி கேள்வி
Anbumani Ramadoss

ஓட்டுனர், நடத்துனர் நியமன போட்டித்தேர்வு..இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதா… அன்புமணி கேள்வி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com