Bangladesh : வங்கதேசத்தில் இந்து ஒருவரின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bangladesh : வங்கதேசத்தில் இந்து ஒருவரின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published on: December 29, 2025 at 10:56 pm
டாக்கா, டிச.29, 2025: அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர் சங்கத்தின் மூலமாக அறியப்பட்ட இளைஞர் ஷரீப் உஸ்மான் ஹாடி கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொல்லப்பட்டார்.
இதையடுத்து அந்நாட்டில் அமைதியின்மை நிலவுகிறது. ஆங்காங்கே ஹாடி ஆதரவாளர்கள் மற்றும் மத அடிப்படைவாதிகள் வன்முறை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
#BreakingNews Cases of attacks on Hindus have reached an alarming level in Bangladesh. On December 27 at 6am, miscreants set fire at homes of Kanti Saha Dumuria village under Pirojpur district. pic.twitter.com/M4s7ROHBSs
— Salah Uddin Shoaib Choudhury (@salah_shoaib) December 28, 2025
இதில் பல்வேறு பகுதிகளில் உள்ள மத சிறுபான்மை இன மக்களான இந்துக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே தாஸ் என்பவர் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு அவரின் மீது தீயை பற்ற வைத்து கொலை செய்தனர்.
மற்றொரு இந்து பணப் பறிப்பில் ஈடுபட்டார் எனக் கூறி கொலை செய்யப்பட்டார். இந்த இரு வேறு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், வங்கதேசத்தின் பீரோஜ்பூர் மாவட்டத்தின் தும்ரிடோலா கிராமத்தில் உள்ள சாஹா என்பவரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது.
இது தொடர்பாக உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட செய்தி அறிக்கையில், “சிறுபான்மையினரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், சந்தேகநபர்கள் ஒரு அறைக்குள் துணியை நுழைத்து தீ வைத்ததாகவும், பின்னர் அந்த தீ விரைவாக முழு வீட்டிலும் பரவியது” எனத் தெரியவருகிறது.
இதையும் படிங்க : வங்கதேசத்தில் இந்து இளைஞர் அடித்துக்கொலை.. கும்பல் வெறிச்செயல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com