Donald Trump: நைஜீரியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா வான்வெளித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த பயங்கரவாதிகளுக்கு ஹேப்பி கிறிஸ்துமஸ் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
Donald Trump: நைஜீரியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா வான்வெளித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த பயங்கரவாதிகளுக்கு ஹேப்பி கிறிஸ்துமஸ் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

Published on: December 26, 2025 at 3:05 pm
Updated on: December 26, 2025 at 3:06 pm
வாஷிங்டன், டிச.26, 2025: ஆப்பிரிக்க நாடான நைஜீரிய அரசின் கோரிக்கையின் பேரில், அமெரிக்கா நேற்று (டிச.25, 2025) வடமேற்கு நைஜீரியாவில் இஸ்லாமிய மாநில (ISIS) போராளிகளுக்கு எதிராக வான் தாக்குதல் நடத்தியது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், “வடமேற்கு நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) பயங்கரவாதிகளுக்கு எதிராக சக்திவாய்ந்த மற்றும் உயிர்க்கொல்லி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்று கூறினார். அவர், அந்த அமைப்பு அப்பகுதியில் கிறிஸ்தவர்களை குறிவைத்து வந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும், தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளுக்கு ஹேப்பி கிறிஸ்துமஸ் எனவும் கூறியுள்ளார்.
ட்ரம்ப் எச்சரிக்கை
முன்னதாக, கடந்த அக்டோபர் இறுதியில் இருந்து, நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் “உயிர் அச்சுறுத்தலை” எதிர்கொள்கிறார்கள் என்று டிரம்ப் எச்சரித்து வந்தார். மேலும், தேவையானால் அமெரிக்கா இராணுவ ரீதியாக தலையீடு செய்யும் என்று அவர் எச்சரித்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : வங்கதேசத்தில் இந்து இளைஞர் அடித்துக்கொலை.. கும்பல் வெறிச்செயல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com