Mutual Fund: இந்தியாவின் முன்னணி வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மாதந்தோறும் ரூபாய் 2000 முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பது தெரியுமா?
Mutual Fund: இந்தியாவின் முன்னணி வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மாதந்தோறும் ரூபாய் 2000 முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பது தெரியுமா?

Published on: December 15, 2025 at 5:32 pm
Updated on: December 15, 2025 at 5:34 pm
புதுடெல்லி டிசம்பர் 15 2025: இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் மியூச்சுவல் பண் திட்டங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக அவர்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற நம்பகமான நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய அதிக அளவு ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில், எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மாதம் தோறும் ரூபாய் 2000 விதம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
எஸ் ஐ பி முதலீடு
எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை; இந்த திட்டங்களின் கடந்த கால வருவாய் எதிர்கால வரவுக்கு உத்திரவாதம் அளிக்காது. இருந்தபோதிலும் கடந்த கால வருவாய் தொடர்பான தரவுகள், நாம் சரியான பங்குகளில் தான் முதலீடு செய்கிறோமா என்பதை அறிந்து கொள்ள உதவுகின்றன.
இந்த நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மாதம் ரூபாய் இரண்டு ஆயிரம் முதலீடு, ₹24.40 லட்சம் திரட்ட உதவி உள்ளது. கடந்த காலங்களில் பெரும்பாலும் நடுத்தர மக்கள் பழங்கால சேமிப்பு திட்டங்களை நம்பி வந்தனர்; ஆனால் தற்போது பெரும்பாலான நடுத்தர மக்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மாதாந்திர விற்பனையில் 27% அதிகரிப்பு: SAIL நிறுவனத்தின் சாதனை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com