Food: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய வெஜ் பிரைடு ரைஸ் இப்படி செஞ்சு அசத்துங்க.
Food: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய வெஜ் பிரைடு ரைஸ் இப்படி செஞ்சு அசத்துங்க.

Published on: December 12, 2025 at 10:14 am
Updated on: December 12, 2025 at 10:15 am
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய வெஜ் ஃபிரைடு ரைஸ் ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
பாஸ்மதி அரிசி – 1/4 கிலோ
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
ஸ்பிரிங் ஆனியன் – சிறிதளவு
முட்டைகோஸ் – சிறிதளவு
கேரட் – சிறிதளவு
பீன்ஸ் – சிறிதளவு
குடைமிளகாய் – சிறிதளவு
சோயா சாஸ் -3 டீஸ்பூன்
மிளகுத்தூள் -1/2 ஸ்பூன்
சர்க்கரை -1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
பாஸ்மதி அரிசியை இரண்டு, மூன்று முறை நன்கு கழுவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து நன்கு கொதி வந்த பின்னர் ஊற வைத்த பாசுமதி அரிசியை வடிகட்டி சேர்க்க வேண்டும். அரிசி வேகும் பொழுது இதனுடன் சிறிது உப்பு மற்றும் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அரிசி 80 சதவீதம் வெந்தவுடன் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் பொடியாக நறுக்கி வைத்த ஸ்பிரிங் ஆனியன் அல்லது பெரிய வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் சிறிது வதங்கியதும் இதனுடன் நறுக்கி வைத்த முட்டைக்கோஸ், கேரட், குடைமிளகாய் சேர்த்து அடுப்புத்தீயை ஹை ஃப்ளேமில் வைத்து கிளறி விடவும். காய்கறிகள் நிறம் மாறாமல் இருக்க சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் இதனுடன் சோயா சாஸ், மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். சோயா சாஸ் அடர்த்தியாக இருந்தால் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும். சோயா சாஸ் அதிகமாக சேர்த்தால் ப்ரைட் ரைஸ் நிறம் மாறிவிடும். பின்னர் ஹை ஃபிளேமில் இவற்றை நன்கு கிளறி விடவும். இறுதியாக இதனுடன் நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் சேர்க்கவும். இப்போது சுவையான வெஜிடபிள் பிரைடு ரைஸ் ரெடி.
இதையும் படிங்க: கேரட்டில் புட்டிங் கேக்.. சிம்பிளா இப்படி ட்ரை பண்ணுங்க..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com