IndusInd Bank FD interest rates revised | இண்டஸ்இந்த் வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
February 5, 2026
IndusInd Bank FD interest rates revised | இண்டஸ்இந்த் வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

Published on: September 8, 2024 at 11:59 pm
IndusInd Bank FD interest rates | தனியார் வங்கியான இண்டஸ்இந்த் பேங்க் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. திருத்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் செப்.7, 2024 முதல் அமலுக்கு வருகின்றன. புதிய வட்டி விகிதங்களின் படி சாதாரண குடிமக்களின் 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரை வட்டி விகிதங்கள் அளிக்கப்படுகின்றன.
1 முதல் 2 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் டெபாசிட்களுக்கு 7.75 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. மேலும், 1 வருடம் 4 மாதங்கள் முதல் 1 வருடம் 6 மாதங்கள் வரையிலான டெபாசிட்களுக்கு மூத்தக் குடிமக்களுக்கு அதிகப்பட்சமாக 8.49 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதில் பொதுகுடிமக்களுக்கு 7.99 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
எஸ்.பி.ஐ வட்டி விகிதம்
எஸ்.பி.ஐ மூத்த குடிமக்களுக்காக அம்ரித் கலாஷ், 1 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு என பல்வேறு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை நடத்துகிறது. இதில், அம்ரித் கலாஷ் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு எஸ்பிஐ அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. 444 நாள் சிறப்புத் திட்டம் 7.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இதையும் படிங்க : 7.65 சதவீதம் வரை வட்டி: 3 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?
மேலும், 1-, 3- மற்றும் 5 வருட எஸ்.பி.ஐ மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் முறையே 7.30 சதவீதம், 7.25 சதவீதம் மற்றும் 7.50 சதவீதம் ஆகும்.
கோடக் மஹிந்திரா வங்கி
கோடக் மஹிந்திரா வங்கி மூன்று ஆண்டு கால ஃபிக்ஸட் டெபாசிட்களில் பொதுக் குடிமக்களுக்கு 7 சதவீத வருடாந்திர வட்டியை வழங்குகிறது. அதேநேரத்தில், மூத்த குடிமக்களுக்கு 7.6 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்தப் புதிய வட்டி விகிதங்கள் 2024 ஜூன் 14ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com