Himachals Bilaspur landslide: இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் பேருந்து நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Himachals Bilaspur landslide: இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் பேருந்து நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Published on: October 7, 2025 at 11:08 pm
Updated on: October 7, 2025 at 11:09 pm
பிலாஸ்பூர், அக்.7, 2025: இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் ஒரு தனியார் பேருந்து பலத்த இடிபாடுகளுக்குள் புதைந்ததில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர்.
மேலும், இதில் பல பயணிகள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது, இந்நிலையில், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிரதமர் இரங்கல்
இதற்கிடையில், பிலாஸ்பூர் விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்த அனைத்து பயணிகளுக்கும் தலா ரூ.50,000 நிதி உதவி வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
18 பேர் மரணம்
இந்த நிலையில், பிலாஸ்பூர் துணை ஆணையர் ராகுல் குமார், 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தினார்.
எனினும், பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். இதுதொடர்பான சரியான எண்ணிக்கை தற்போது தெரியவில்லை” என்றார்.
இதையும் படிங்க : டெல்லியில் கனமழை.. சாலைகளில் வெள்ள நீர்.. ஆரஞ்சு அலர்ட் விடுப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com