Actor Sriman: “காந்தாரா சாப்ட்டர் 1 ரெகுலர் பிலிம் அல்ல; ஆடை வடிவமைப்பு, மியூசிக் என எல்லாமே அல்டிமேட். ரிஷப் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக” என நடிகர் ஸ்ரீமான் தெரிவித்துள்ளார்.
Actor Sriman: “காந்தாரா சாப்ட்டர் 1 ரெகுலர் பிலிம் அல்ல; ஆடை வடிவமைப்பு, மியூசிக் என எல்லாமே அல்டிமேட். ரிஷப் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக” என நடிகர் ஸ்ரீமான் தெரிவித்துள்ளார்.
Published on: October 5, 2025 at 10:00 am
சென்னை, அக்.5, 2025: “காந்தாரா சாப்டர் 1 படம் மிக அழகாக உள்ளது. படத்தில் அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களும் அழகாக நடித்திருக்கிறார்கள். இந்தியாவில் இப்படி ஓர் படம் பண்ண முடியுமா? எனத் தெரியவில்லை. ஒருவேளை இனிவரும் காலங்களில் இப்படி ஓர் படம் எடுக்க முயற்சி செய்வார்கள்.
படத்தில் காந்தாரா 1 மற்றும் 2க்கு இடையே எல்லாமே புதிதாக இருந்தது. படத்தில் முதல் பாகம் மியூசிக் மற்றும் கடவுள் தான் ஒன்று. மற்றபடி காட்சிகள் மிக அருமை. அந்த வகையில் மக்கள் மனதை வென்றதில் நீங்கள் 100 சதவீதம் வெற்றி பெற்றுவிட்டீர்கள். கடவுள்தான் அல்டிமேட். இதனை படத்தில் அருமையாக காட்டியுள்ளீர்கள்.
இதையும் படிங்க : சன் நெக்ஸ்ட்டில் வெளியாகும் அருள் நிதி பட ட்ரெய்லர்.. Rambo புதிய அப்டேட்
காந்தாரா படத்தின் மூலம் புதிய உலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளீர்கள். படத்தில் மியூசிக் அல்டிமேட் ஆக உள்ளது. இதனை கற்பனை செய்து பார்க்க கூட முடியவில்லை. சிவன் தான் எல்லாமே. நான் அப்படிதான் நம்புகிறேன். ரிஷப் சகோதரா கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்” என நடிகர் ஸ்ரீமான் தெரிவித்துள்ளார்.
மேலும், “தாம் காந்தாரா 3ம் பாகத்திற்காக காத்திருக்கிறேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கிளிப்பை நடிகர் ரிஷப் ஷெட்டி பகிர்ந்துள்ளார். காந்தாரா சாப்டர் 1 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பாஸ்போர்ட் உடன் இன்ஸ்டா ஸ்டோரி.. யார் இந்த நடிகை ரேகா? சுஷாந்த் சிங் உடன் என்ன தொடர்பு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com