India China to resume direct flights: இந்தியாவும் சீனாவும் உறவுகளை இயல்பாக்குவதற்கான முயற்சிகளுக்கு மத்தியில், இந்த மாத இறுதிக்குள் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
India China to resume direct flights: இந்தியாவும் சீனாவும் உறவுகளை இயல்பாக்குவதற்கான முயற்சிகளுக்கு மத்தியில், இந்த மாத இறுதிக்குள் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published on: October 3, 2025 at 10:48 am
Updated on: October 3, 2025 at 11:00 am
புதுடெல்லி, அக்.3, 2025: ஜம்மு காஷ்மீர் கால்வானில் 2020ஆம் ஆண்டு நடந்த எல்லை மோதலுக்குப் பிறகு இந்தியா-சீனா உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் இரு தரப்பு உறவுகளை இயல்பாக்குவதற்கான மற்றொரு குறிப்பிடத்தக்க படியாக, 2025 அக்டோபர் மாத இறுதியில் நேரடி வணிக விமானங்களை மீண்டும் தொடங்க இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.
இது குறித்து வெளியான அறிக்கையில், “இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளை படிப்படியாக இயல்பாக்குதல் நோக்கத்தின் ஒரு பகுதியாக இரு நாடுகளுக்கு இடையே விமானப் போக்குவரத்து இம்மாதத்தில் தொடங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், “இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளை படிப்படியாக இயல்பாக்குவதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறையின் ஒரு பகுதியாக இந்த விமான சேவை இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்தும், திருத்தப்பட்ட விமான சேவை ஒப்பந்தம் குறித்தும் தொழில்நுட்ப அளவிலான விவாதங்களில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்.. கொலம்பியாவில் இருந்து மோடி அரசை தாக்கிய ராகுல் காந்தி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com