K. Annamalai: 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரம் வரும் அக்டோபர் மாதம் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கவுள்ளார்.
K. Annamalai: 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரம் வரும் அக்டோபர் மாதம் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கவுள்ளார்.
Published on: September 16, 2025 at 7:52 pm
Updated on: September 16, 2025 at 8:35 pm
சென்னை, செப்.16, 2025: பாரதிய ஜனதா கட்சியின் சிந்தனை கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது கூட்டத்தினரிடம் பேசிய அவர், அக்டோபர் முதல் வாரத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார் எனத் தெரிவித்தார். தொடர்ந்துப் பேசிய அண்ணாமலை, “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அக்டோபர் முதல் வாரத்தில் தமிழ்நாடு தழுவிய அளவில் பரப்புரையை தொடங்கவுள்ளார். அவர் நாள்தோறும் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களில் பொதுக்கூட்டமும் நடைபெறும்” என்றார்.
எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு வரவேற்பு
தொடர்ந்து பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, “எடப்பாடி பழனிசாயின் பேச்சுக்கு வரவேற்பு” தெரிவித்தார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய அண்ணாமலை, “அ.தி.மு.க ஆட்சியை காப்பாற்றியது பாரதிய ஜனதா என பேசியுள்ளார்; நேற்றைய கூட்டத்தில் அவரின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்தது” என்றார்.
இ.பி.எஸ்.க்கு மக்கள் ஆதரவு
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் ஆதரவு உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை சுற்றுப்பயணத்தில் எதிர்பார்த்ததை விட மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களும் அ.தி.மு.க கூட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி.. பசும்பொன் தேவருக்கு பாரத ரத்னா? பரபரக்கும் அரசியல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com