திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Published on: September 2, 2024 at 4:04 pm
Tirunelveli | நெல்லை மாநகர் மாவட்டம் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை சட்டமன்ற தொகுதியின் அடுத்த 2024-2027 மூன்றாண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (செப்.1, 2024) மாலை 5.மணிக்கு மேலப்பாளையத்தில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், தேர்தல் அதிகாரியாக வழக்கறிஞர் ஆரிஃப் பாஷா, கனி ஆகியோர் தேர்தலை ஜனநாயக அடிப்படையில் வாக்கு சீட்டின் முறையில் நடத்தினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் அன்வர்ஷா,தேர்தல் பார்வையாளராக மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி கலந்து கொண்டனர்.
இந்தத் தேர்திலில், முதற்கட்ட தேர்தலில் தொகுதி செயற்குழு உறுப்பினர்களாக சேக் இஸ்மாயில், அன்வர்ஷா , ஷேக் முகமது ஃபயாஸ்,முனவர், ரபிக் ராஜா வழக்கறிஞர்கள் முபாரக் அலி, இஸ்மாயில்
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் நடைபெற்ற நிர்வாகிகளுக்கான தேர்தலில், நெல்லை சட்டமன்ற தொகுதி தலைவராக தாழையூத்து சேக் இஸ்மாயில் தோந்தெடுக்கப்பட்டார்.
துணை தலைவராக அன்வர்ஷா, தொகுதி செயலாளராக ஷேக் முகமது பயாஸ், இணை செயலாளர்களாக டவுன் முனவர், ரபீக் ராஜா, தொகுதி பொருளாளராக சுத்தமல்லி வழக்கறிஞர் முபாரக்அலி, தொகுதி செயற்குழு உறுப்பினராக வழக்கறிஞர் இஸ்மாயில் ஆகியோர்கள் தேர்ந்தெடுக்க பபட்டனர்.
நிறைவாக புதிய தொகுதி தலைவர் சேக் இஸ்மாயில் நன்றி கூறினார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் மகள் பள்ளியில் சமச்சீர் கல்வியை கொண்டுவர முடியுமா? ஹெச். ராஜா கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com