Soori Santhanam and Yogi: நடிகர்கள் சந்தானம், சூரி மற்றும் யோகி பாபுவின் 3 படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளன. இது கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Soori Santhanam and Yogi: நடிகர்கள் சந்தானம், சூரி மற்றும் யோகி பாபுவின் 3 படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளன. இது கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: April 28, 2025 at 3:02 pm
சென்னை, ஏப்.28 2025: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, தற்போது ஹீரோ அந்தஸ்த்தில் திரைப்படங்களில் மாஸ் காட்டி வரும் நடிகர்கள் சந்தானம், சூரி மற்றும் யோகி பாபு. இதில் நடிகர் யோகி பாபு தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். அதே நேரம் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் அவர் கதையின் நாயகனாக தோன்றுகிறார்.
இவரின் நடிப்பில் மண்டேலா என்ற திரைப்படம் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இன்றைய அரசியல் எதார்த்தத்தை இந்த சினிமா மிக அழகாக பேசி இருக்கும்.
அதேபோல் இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை படைப்பின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சூரி. தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டும் தோன்றிய நடிகர் சூரி, வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலமாக நகைச்சுவை நாயகனாக உயர்ந்தார்.
தொடர்ந்து தற்போது விடுதலை பாகம் ஒன்று பாகம் 2 மற்றும் கருடன் என பல்வேறு திரைப்படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். நடிகர் சந்தானத்தை பொருத்தவரை ரஜினி, அஜித், விஜய் என முன்னணி நடிகர்கள் படத்தில் நகைச்சுவை நாயகனாக நடித்துள்ளார்.
அதன் பின்னர் தற்போது தொடர்ந்து நாயகனாக திரைப்படங்கள் நடித்து வருகிறார். இந்த மூன்று நாயகர்களின் திரைப்படங்களும் 2025 மே மாதம் 16ஆம் தேதி வெளியாகிறது. ஆம் யோகி பாபு நடிப்பில், ‘ஜோரா கைய தட்டுங்க’ என்ற திரைப்படமும் சூரி நடிப்பில், ‘மாமன்’ என்ற திரைப்படமும் சந்தானம் நடிப்பில், ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற படமும் வெளியாகின்றன.
நகைச்சுவை நடிகர்களாக சினிமா துறையில் அறிமுகமாகி தற்போது ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்து உள்ள மூன்று ஹீரோக்களின் படங்கள் ஒரே தினத்தில் வெளியாவது கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அடேங்கப்பா.. இத்தனை கோடிகளா? எம்புரான் லைஃப் டைம் வசூல் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com