Mutual Fund | சமீபகாலமாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு பலராலும் விரும்பப்படும் முதலீட்டு திட்டமாக மாறிவருகிறது.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Mutual Fund | சமீபகாலமாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு பலராலும் விரும்பப்படும் முதலீட்டு திட்டமாக மாறிவருகிறது.
Published on: September 1, 2024 at 3:29 pm
Updated on: September 1, 2024 at 3:40 pm
Mutual Fund | மாதம் ரூ.15 ஆயிரம் முதலீட்டை ரூ.74 லட்சமாக மாற்றிய டாப் ஃப்ளெக்ஸி ஃபண்டுகள் உள்பட சிறந்த திட்டங்கள் இங்குள்ளன.
மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு தொழில்முறை நிதி மேலாளரால் நிர்வகிக்கப்படும் பணத்தின் தொகுப்பாகும். இது ஒரு பொதுவான முதலீட்டு நோக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் பல முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைச் சேகரிக்கிறது. இந்நிலையில், சமீபகாலமாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு பலராலும் விரும்பப்படும் முதலீட்டு திட்டமாக மாறிவருகிறது.
அந்தவகையில் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த பங்களிப்பை கொடுத்த டாப் ஃப்ளெக்ஸி ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம். இதில் ஒரு ஃபண்டு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.74 லட்சம் வரை ரிட்டன் கொடுத்துள்ளது. எனினும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு ரிஸ்க் நிறைந்தது என்பதையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெஸ்ட் ரிட்டன் கொடுத்த சிறந்த ஃப்ளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்
குவாண்ட் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு
குவாண்ட் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு கடந்த 10 ஆண்டுகளில் 26.51 சதவீத வளர்ச்சி கொடுத்துள்ளது. இந்தத் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் 10 ஆண்டுகால எஸ்.ஐ.பி (SIP) முதலீடு ரூ.73,42,601 ஆக உள்ளது.
ஜே.எம். ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு
ஜே.எம். ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு கடந்த 10 ஆண்டுகளில் 23.95 சதவீத வளர்ச்சியை கொடுத்துள்ளது. இந்தத் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் 10 ஆண்டுகால எஸ்.ஐ.பி முதலீடு ரூ.63,93,054 ஆக உயர்ந்துள்ளது.
பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு
பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு கடந்த 10 ஆண்டுகளில் 21.85 சதவீத வளர்ச்சி கொடுத்துள்ளது. இந்தத் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் 10 ஆண்டுகால எஸ்.ஐ.பி முதலீடு ரூ.57,04,763 ஆக உயர்ந்துள்ளது.
(Disclaimer | மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் படிக்கவும். திராவிடன் டைம்ஸ் குறிப்பிட்ட எந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தையும் விளம்பரப்படுத்தவில்லை. இதில், முதலீடு செய்வது முதலீட்டாளரின் தனிப்பட்ட விருப்பு, பொறுப்பை சார்ந்தது.)
இதையும் படிங்க : பி.பி.எஃப் மைனர் கணக்குக்கு புதிய விதி; செப்.1 முதல் அமல்: நோட் பண்ணுங்க ப்ளீஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com