Fixed Deposit: மூத்தக் குடிமக்களின் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு வங்கிகள் 9.10 சதவீதம் வரை ரிட்டன் அளிக்கின்றன. இதில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்?
Fixed Deposit: மூத்தக் குடிமக்களின் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு வங்கிகள் 9.10 சதவீதம் வரை ரிட்டன் அளிக்கின்றன. இதில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்?
Published on: April 25, 2025 at 11:30 am
சென்னை, ஏப்.25 2025: இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஏனெனில் இந்தத் திட்டங்கள் சான்றளிக்கப்பட்ட ரிட்டன் வாய்ப்பை வழங்குகின்றன. மேலும், ரிஸ்க்கும் குறைவு. இதனால் பெரும்பாலும், மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்கின்றனர்.
இந்த நிலையில், மூத்தக் குடிமக்களின் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 9.1 சதவீதம் வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, 444 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் ரூ.10 லட்சம் சீனியர் சிட்டிசன்கள் முதலீடு செய்தால் ரூ.11 லட்சத்து 4 ஆயிரத்து 436 கிடைக்கும்.
ஏ.யூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
ஏ.யூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, 18 மாத ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்த வங்கியில் மூத்தக் குடிமக்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ.11 லட்சத்து 30 ஆயிரத்து 309 கிடைக்கும்.
ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, 888 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 8.55 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ரூ.10 லட்சம் சீனியர் சிட்டிசன்கள் முதலீடு செய்தால் ரூ.12 லட்சத்து 28 ஆயிரத்து 530 ரிட்டன் ஆக கிடைக்கும்.
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, 18 மாத ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 8.75 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மூத்தக் குடிமக்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ.11 லட்சத்து 38 ஆயிரத்து 055 வருவாய் ஆக கிடைக்கும்.
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, 2 முதல் 3 ஆண்டுகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 8.75 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்த வங்கியில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால், மூத்தக் குடிமக்களுக்கு ரூ.12 லட்சத்து 96 ஆயிரத்து 502 ரிட்டன் கிடைக்கும்.
இதையும் படிங்க : ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வட்டியை வாரி வழங்கும் வங்கிகள்; எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com