Food: மீன் பிரியர்கள் விரும்பி உண்ணக்கூடிய சுவையான நண்டு மசாலா இப்படி செஞ்சு அசத்துங்க.
Food: மீன் பிரியர்கள் விரும்பி உண்ணக்கூடிய சுவையான நண்டு மசாலா இப்படி செஞ்சு அசத்துங்க.
Published on: April 20, 2025 at 2:39 pm
காரசாரமான நண்டு மசாலா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நண்டு -½கிலோ எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
சோம்பு -1 டீஸ்பூன் சின்ன வெங்காயம் – 1கப்
கருவேப்பிலை -1 கொத்து
பச்சை மிளகாய் -2
தக்காளி -1
இஞ்சி பூண்டு விழுது -2 டீஸ்பூன்
மிளகாய் தூள் -2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன்
அரைக்க வேண்டியவை
எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் -1 கப்
சோம்பு -1 டீஸ்பூன்
சீரகம் -1 டீஸ்பூன்
மிளகு -1 மிளகு
கருவேப்பிலை -1
தக்காளி -2
கொத்தமல்லி இலை -1 கொத்து
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வேகமாக வதங்குவதற்கு சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கி பொன்னிறமாக மாறினால் தொக்கு மிகவும் சுவையாக இருக்கும். பின்னார் இதனுடன் சோம்பு, சீரகம், மிளகு, கருவேப்பிலை மற்றும் பழுத்த தக்காளி பழத்தை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நான்கு மசிந்து வந்ததும் இந்த கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் சோம்பு சேர்க்கவும். சோம்பு பொறிந்ததும் இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு கப் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இதையும் படிங்க: காரமான கனவா மீன் மசாலா ; ஜம்முன்னு செஞ்சு சாப்பிடுங்க !
பின்னர் இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து விடவும். இதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பு தீயை லோ பிளேவில் வைத்து மசாலாவின் பச்சை வாடை நீங்கும் வரை வதக்கவும். பின்னர் இதனுடன் சுத்தம் செய்து வைத்த நண்டு துண்டுகளை சேர்த்து கலந்து விடவும். மசாலா நண்டுடன் நன்கு ஒட்டும் அளவிற்கு கலந்து விடவும்.
பின்னர் இதனுடன் ஏற்கனவே வதக்கி அரைத்த மசாலா விழுதை சேர்த்து வதக்கவும். பின்னர் இதனுடன் குழம்புக்கு தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு அடுப்புத்தீயை மீடியம் ஃப்ளேமில் வைத்து 20 நிமிடம் வேக விடவும். இப்போது எண்ணெய் பிரிந்து சுவையான நண்டு மசாலா தயார்.
இதையும் படிங்க 1 கிலோ மீன் வாங்கினா போதும்.. இந்தக் குழம்பின் ருசியே தனிதான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com