Fixed Deposit: பேங்க் ஆப் பரோடா வங்கி 444 நாட்கள் ஸ்கொயர் டிரைவ் ஃபிக்ஸட் டெபாசிட் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் எவ்வளவு வட்டி? ₹1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்?
Fixed Deposit: பேங்க் ஆப் பரோடா வங்கி 444 நாட்கள் ஸ்கொயர் டிரைவ் ஃபிக்ஸட் டெபாசிட் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் எவ்வளவு வட்டி? ₹1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்?

Published on: April 9, 2025 at 10:38 am
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா, 444 நாட்கள் கால அளவு கொண்ட ஸ்கொயர் டிரைவ் என்ற ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக 7.80 சதவீதம் வரை வட்டி விகிதம் கிடைக்கிறது. இந்த புதிய பிக்சட் டெபாசிட் திட்டமானது 2025 ஏப்ரல் ஏழாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதம்
பேங்க் ஆப் பரோடா அறிமுகப்படுத்தியுள்ள 444 நாட்கள் ஸ்கொயர் டிரைவ் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் பொதுக் குடி மக்களுக்கு ஆண்டுக்கு 7.15 சதவீதமும்; மூத்த குடிமக்களுக்கு 7.65 சதவீதமும்; சிறப்பு மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.80 சதவீதமும் வட்டி விகிதம் ஆண்டுக்கு வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதமானது ஆண்டுக்கு முதலீட்டாளரின் வயதை பொறுத்து வழங்கப்படும்.
இதையும் படிங்க: பி.பி.எஃப், சுகன்யா சம்ரித்தி யோஜனா ஸ்கீம் வட்டி விகிதம் மாற்றம்? முழு விவரம்!
அதிகபட்ச முதலீடு?
₹1 லட்சம் முதலீடு எவ்வளவு ரிட்டன்?
இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் ₹1 முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.மேலே குறிப்பிட்டது போல் வட்டி விகிதங்கள், முதலீட்டாளரின் வயதை பொருத்து மாறுபடும். ஆகவே ரூபாய் ஒரு லட்சத்தை பொதுக் குடிமக்கள் முதலீடு செய்தால் ₹1,08,763 கிடைக்கும். இதுவே மூத்த குடிமக்கள் ₹1 லட்சம் முதலீடு செய்தால், ₹1, 09,381 ரிட்டன் ஆக கிடைக்கும். சூப்பர் சீனியர் முத்த குடிமக்களை பொருத்தமட்டில் ₹1 லட்சம் முதலீடு செய்தால், ₹1, 09,504 ரிட்டன் ஆக கிடைக்கும்.
இதையும் படிங்க: 5 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்.. எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com