ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவிகள் விடுதியை காலி செய்து, குற்றவாளிகளை கைது செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவிகள் விடுதியை காலி செய்து, குற்றவாளிகளை கைது செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
Published on: August 30, 2024 at 2:44 pm
Andhra students protest |ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சேஷாத்திரி ராவ் குட்லவல்லேரு பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியில் உள்ள கழிவறைகளில் மர்ம நபர்கள் ஸ்பை கேமரா பொருத்தியதாகக் கூறி கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் கல்லூரியில் பரவியதையடுத்து, ஆயிரக்கணக்கான மாணவர்கள் வியாழக்கிழமை (ஆக.29, 2024) இரவு வெளியே வந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30, 2024) மதியம் வரை மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டங்களைத் தொடர்ந்தனர்.
இந்தப் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த நிர்வாகம் முயன்றும் பலனில்லை. இந்நிலையில், கல்லூரிக்கு விரைந்த பெற்றோர் விடுதியில் கேமரா பொருத்தப்பட்ட சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பேசிய ஏலூர் ரேஞ்ச் காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஐஜி) ஜி.வி.ஜி. அசோக் குமார், “குட்லவல்லேறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கல்லூரி வளாகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி விடுதி மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய இடங்களில் தீவிர சோதனைகள் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், கிருஷ்ணா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) ஆர்.கங்காதர் ராவ், “சந்தேக நபர்களின் மொபைல் போன்கள், மடிக்கணினிகள் மற்றும் பிற சாதனங்களை போலீசார் சோதனையிட்டனர்” என்றார்.
இதையும் படிங்க சென்னை மருத்துவருக்கு ஆபாச படம்: திருவாரூர் டாக்டர் அதிரடி கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com