தமிழ்நாடு பா.ஜ.கவில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பா.ஜ.கவில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
Published on: August 30, 2024 at 3:05 pm
TNBJP | தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை உயர் கல்வி பயில செப்டம்பர் முதல் நவம்பர் வரை 3 மாத பயணமாக லண்டன் சென்றுள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கட்சியின் செயல்பாட்டை கண்காணிக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் உத்தரவுப்படி, அந்தக் குழு கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் என்று தேசிய பொதுச் செயலாளரும் தலைமையகப் பொறுப்பாளருமான அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக எச்.ராஜாவும், உறுப்பினர்களாக கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, பி.கங்கசபாபதி மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர்கள் எம். முருகானந்தம், ராம ஸ்ரீனிவாசன், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோர் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனது வாழ்த்துகளை தெரிவித்த பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அந்தக் குழுவுடன் இணைந்து செயல்படுவேன் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க லண்டன் புறப்பட்டார் அண்ணாமலை: தமிழக பா.ஜ.க.வில் அடுத்து என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com