திருமணமான பெண் மருத்துவருக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள் அனுப்பிய திருவாரூர் மருத்துவர் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
திருமணமான பெண் மருத்துவருக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள் அனுப்பிய திருவாரூர் மருத்துவர் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Published on: August 29, 2024 at 4:48 pm
Updated on: August 29, 2024 at 7:22 pm
Chennai |சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு ஆபாச படங்கள் மற்றும் குறுஞசெய்திகள் அனுப்பியதாக 27 வயதான சுரேஷ் குமார் என்ற டாக்டர் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட டாக்டர் சுரேஷ் குமார் திருவாரூரில் பணிபுரிந்துவருகிறார். சைபர் கிரைமில் புகார் அளித்த மருத்துவரின் மனைவி சென்னை குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்துவருகிறார்.
போலீசார் நடத்திய விசாரணையில் புகார்தாரரின் மனைவியும், சுரேஷ் குமாரும் புதுச்சேரியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் 2015-2021 காலக்கட்டத்தில் படித்துள்ளனர்.
முதலில் இன்ஸ்டாகிராமில் மருத்துவர் சுரேஷ் ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட மருத்துவர் இன்ஸ்டாகிராம் ஐ.டி.யை ப்ளாக் செய்த நிலையில் இ-மெயில் மற்றும் இதர சமூக வலைதளங்கள் வழியாக தொடர்புக் கொண்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க தனிநபர் புகைப்படம் பதிவேற்றம்.. 3 ஆண்டு ஜெயில்: போலீஸ் எச்சரிக்கை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com