International Womens Day 2025: ஜெயலலிதா முதல் ரேகா குப்தா வரை.. இந்திய அரசியலில் சாதித்த பெண்கள்!

International Womens Day 2025: சர்வதேச மகளிர் தினமான இன்று (மார்ச் 8, 2025) இந்திய அரசியலில் சாதித்த பெண் அரசியல் தலைவர்கள் குறித்து பார்க்கலாம்.

Published on: March 8, 2025 at 5:25 pm

Updated on: March 8, 2025 at 6:54 pm

நீண்ட காலமாக இந்திய பெண்கள் மீதான கருத்துக்களை உடைத்து தற்போது விளையாட்டு, பொழுதுபோக்கு, அறிவியல் மற்றும் அரசியல் என அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்களை நிரூபித்து உள்ளனர். இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்றைய நாளில் இந்திய பெண்களின் முக்கிய பங்களிப்புகளை அங்கீகரிப்பது மிகவும் அவசியம்.

அரசியலில் பெரும்பாலும் ஆண்கள் அதிகம் செலுத்தி வந்தாலும் சில முக்கிய பெண் தலைவர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை செய்துள்ளனர். இவர்கள் தலைமை பண்பிற்கு திறமை இருந்தால் போதும் என்பதை நிரூபித்துள்ளனர்.

இந்தியாவின் செல்வாக்கு மிக்க பெண் அரசியல்வாதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

சோனியா காந்தி

இந்திய தேசிய காங்கிரஸின் நீண்ட காலம் தலைவராக இருந்தவர் சோனியா காந்தி, அவரது தலைமையின் கீழ் காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உருவாக்கி 2004 முதல் 2014 வரை ஆட்சி அமைந்தது. தனது பதவி காலத்தில் நாட்டின் அரசியல் திசையை வடிவமைப்பதில்முக்கிய பங்கு வைத்துள்ளார்

மம்தா பானர்ஜி

மேற்குவங்க முதல்வரான மம்தா பானர்ஜி அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். இவர் தனது செயல்பாடுகளின் மூலம் ஆதிக்கத்தை முறியடித்து ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களுக்கு பாதுகாவலராக மாறினார். மேலும் இவர் மாநிலம் மற்றும் தேசிய அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

நிர்மலா சீதாராமன்

இந்தியாவின் முழு நேர முதல் பெண் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சராக இதுவரை 8 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் ஒரு முக்கிய அரசியல் நபராக வரலாறு படைத்துள்ளார். நிதி அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பு நிர்மலா சீதாராமன் மத்திய பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார். இந்திரா காந்திக்கு பிறகு இந்த பதவியை வகித்த இரண்டாவது பெண்மணி இவர் ஆவார்.

ரேகா குப்தா

டெல்லியின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் ரேகா குப்தா. இந்திய தலைநகரான டெல்லியின் புதிய முதலமைச்சரான இவர் சுஷ்மா சுவராஜுக்கு பிறகு பாஜகவின் ஒரே பெண் முதல்வராக வரலாறு படைத்துள்ளார்.

ரேகா குப்தா மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் இவர் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராகவும் பின்னர் பொதுச்செயலாளர் ஆகவும் பணியாற்றி வருகிறார். மேலும் பாஜகவில் டெல்லி மகிலா மூர்சாவின் பொதுச் செயலாளராகவும் கட்சியின் தேசிய செயற்குழுவில் உறுப்பினராகவும் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

ஸ்மிருதி இரானி

‘கியுங்கி சாஸ் பி கபி பஹு தி’ தொடரில் துளசி விராணி என்ற கதாபாத்திரத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஸ்மிருதி இராணி .பின்னர் தொலைக்காட்சியில் இருந்து விலகி பாஜகவுடன் வெற்றிகரமாக அரசியல் வாழ்க்கையில் நுழைந்தார். பிரதமர் மோடி அரசின் கீழ் கல்வி, ஜவுளி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சிறுபான்மையினர் விவகாரங்கள் உள்ளிட்ட மத்திய அமைச்சரவையின் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

மறைந்த முன்னாள் பெண் அரசியல்வாதிகள்

ஜெயலலிதா

தமிழ்நாட்டின் முதல் பெண் முதல்வரான ஜெ. ஜெயலலிதா இன்றும் ‘அம்மா’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். அரசியலில் நுழைவதற்கு முன்பு வெற்றிகரமான நடிகையாக இருந்த ஜெயலலிதா கொள்கை மற்றும் நிர்வாகம் சார்ந்த விஷயங்களில் தனது திறமையான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி உள்ளார். பெண்களுக்கு தனது தலைமையால் மாநிலத்தின் அரசியல் நிலப்பரப்பை மாற்றியமைத்தார்.

ஷீலா தீட்சித்

1998 முதல் 2013 வரை டெல்லியின் மிக நீண்ட காலம் பெண் முதலமைச்சராக பதவி வகித்தவர் ஷீலா தீட்சித். டெல்லியின் உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் சுகாதார அமைப்புகளை மேம்படுத்தியதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். டெல்லியை நவீன, நகரமாக மாற்றுவதில் அவரது தலைமையும் தொலைநோக்குப் பார்வையும் முக்கிய பங்கு வகித்தன.

இந்திரா காந்தி

இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமரான இந்திரா காந்தி, இந்திய அரசியலில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்தவ ர். 1966 முதல் 1977 வரை பிரதமராகப் பணியாற்றினார்.

1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் உருவாக்கத்திற்கு வழிவகுத்த போர் உட்பட சவாலான காலகட்டங்களில் நாட்டை வழிநடத்தினார்.

மகாராணி காயத்ரி தேவி

ஜெய்ப்பூரின் கடைசி ராணி மகாராணி காயத்ரி தேவி. இவர் ஒரு அரசியல் தலைவராகவும், சமூக நோக்கங்களுக்கான ஒரு வீரராகவும் இருந்தவர். அவரது செல்வாக்கு மற்றும் அரச அந்தஸ்தைத் தாண்டி, ஜெய்ப்பூரின் அரசியல் நிலப்பரப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

இவர் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை எதிர்த்து, சி. ராஜகோபாலாச்சாரியின் கீழ் சுதந்திரா கட்சியுடன் இணைந்தார். 1962 தேர்தல்களில், எந்தவொரு ஜனநாயக நாட்டின் வரலாற்றிலும் இல்லாத அளவுக்கு மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று வரலாறு படைத்தார்.

இதையும் படிங்க Bodybuilder Chitra Purushotham: யார் இந்த பெண் பாடி பில்டர்? மணமகன் யார்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com