MK Stalin Vs Tamilisai: தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு தெலுங்கில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தமிழிசைக்கு மு க ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
MK Stalin Vs Tamilisai: தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு தெலுங்கில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தமிழிசைக்கு மு க ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
Published on: March 4, 2025 at 1:18 pm
சென்னை, மார்ச் 4, 2025: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மார்ச் ஒன்றாம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
அதாவது மத்திய அரசின் முன்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் மு க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கு உட்பட முன்மொழிகளில் மு க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.
இந்த நிலையில் இதற்கு மு க ஸ்டாலின் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மு க ஸ்டாலின், ” என் பிறந்தநாளில் சகோதரி தமிழிசை சவுந்தரராஜன் மூன்று மொழிகளில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
மும்மொழியில் வாழ்த்துகிறேன்…
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) February 28, 2025
“மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!”
“Wishing the Honourable Chief Minister Thiru M.K. Stalin a very happy birthday!”
“గౌరవనీయ ముఖ్యమంత్రి శ్రీ ము.క. స్టాలిన్ గారికి హృదయపూర్వక జన్మదిన… pic.twitter.com/4evSVI6ubC
அவர் தன் அன்பையும் தன் இயக்கத்திற்குரிய பண்பையும் காட்டியிருக்கிறார். தெலுங்கை தாய்மொழியாக கொண்ட மாநிலத்தில் அவர் பணியாற்றியதால் அந்த பழக்கத்தின் மூலமாக அவர் தெலுங்கு மொழியை அறிந்து கொண்டுள்ளார்.
இதிலிருந்து மூன்றாவது மொழியை வழிந்து படிக்க வேண்டியதில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். மேலும் தேவை உள்ளோர் அதனைப் புரிந்து கொண்டு பயன்படுத்த முடியும் என்ற திராவிட இயக்கத்தின் கொள்கையை தமிழிசை உறுதிப்படுத்தி உள்ளார்” என்றார்.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுக அரசு தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் முன் மொழியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
இதையும் படிங்க நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலை பரபரப்பு கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com