Kaliammal quits Naam Tamilar Party: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தெரிவித்துள்ளார்.
Kaliammal quits Naam Tamilar Party: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தெரிவித்துள்ளார்.
Published on: February 24, 2025 at 4:48 pm
கடந்த சில மாதங்களாகவே நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகுவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அதனை உறுதிபடுத்தும் வகையில் இன்று அவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
காளியம்மாள் வெளியிட்டுள்ள செய்தியில், இதுவரை இல்லாத கனத்த இதயத்தோடு எழுதுவதாக குறிப்பிட்டுள்ள அவர், கட்சியில் பயணித்த ஒவ்வொரு கணமும் உண்மையும் நேர்மையுமாய் உளப்பூர்வமாக என் குடும்பத்திற்கும் மேலாக நேசித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த 6 ஆண்டுகால பயணம் தனக்கு அரசியல் ரீதியான பல அனுபவங்களை கொடுத்துள்ளதாகவும், பல உறவுகள் அக்கா தங்கையாகவும் அண்ணன் தம்பிகளாகவும் கிடைத்ததையும் அவர்கள் என்னுடன் பழகிய விதங்களையும் எண்ணி மகிழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நமக்கெல்லாம் ஒரே பெருங்கனவு தான், அது தமிழ்த்தேசியத்தின் வெற்றியும், அதனை மக்களிடம் கொண்டு சேர்த்தல் என்னும் உன்னத நோக்கமும் அந்த நோக்கத்தை அடைய வேண்டும் என்ற பாதையில் நானும் ஒரு பகுதியாய் இணைந்து பயணித்ததில் நான் பெருமை கொள்கிறேன். ஆனால் இப்பாதை இவ்வளவு சீக்கிரம் முடியும் என நான் கனவிலும் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் எதிரி அல்ல.. மு.க ஸ்டாலின்!
கடந்த 6 வருடகாலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும், நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன். எனினும் காலத்தின் சூழல், உயிராக எண்ணி, வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன், கனத்த இதயத்துடனும் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இங்கு பயணித்ததில் களத்தில் இன உணர்வோடு நின்று நேர்மையாய் வேலை செய்த அத்தனை உறவுகளுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளதோடு தனது வருத்தங்களையும் பகிர்ந்துகொள்வதாக தெரிவித்துள்ளார்.
எனக்கான நெருக்கடிகள் நிறைய வந்த போதும் என்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையாலும் நான் உங்கள் மீது கொண்ட அன்பினாலும் எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருந்தேன் ஆனால் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டதை எண்ணி மனம் வருந்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
என் மீது அளப்பரிய அன்பு கொண்டு நேசிக்கிற உங்கள் அத்தனை பேருக்கும் நான் என்றென்றும் கடமை பட்டவளாக இருப்பேன் என்றும் என்னுடைய இந்த முடிவு பலருக்கு வருத்தத்தைத் தரலாம் எனக்கும் தான் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்த்தேசியத்தை விதைக்கும் வழியில் தம் பயணம் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க . நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகல்? காளியம்மாளை சுற்றும் வதந்தி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com